வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:வேட்டி என்றழைக்கப்படும் ஆணின் ஆடை.JPG|வேட்டியின் இடுப்புக்கட்டு|thumb|right]]
 
'''வேட்டி''' என்பது [[ஆண்]]கள் உடுத்தும் [[ஆடை]]யாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது [[செவ்வகம்|செவ்வக வடிவில்]] இருக்கும், பொதுவாக [[தமிழகம்|தமிழக]] மக்கள் [[வெண்ணிற ஆடை|வெண்ணிற]] வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். [[இசுலாமியர்|முகமதி]]யர்கள் வந்த பிறகே இது வண்ண நிறமாக மாறியது.{{cn}} இதை [[கைலி]], [[லுங்கி]] அல்லது [[லுங்கி|சாரம்]] என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.
 
== வெவ்வேறு பெயர்கள்==
வரிசை 17:
 
== வேட்டி அணியும் முறைகளும் அதன் வகைகளும் ==
பெரும்பாலும் வெண்மை நிறத்தில்வெண்ணிறத்தில் வேட்டி இருக்கும்; வெளுப்பான் கொண்டு வெளிறச்செய்யாது வெளிர்மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் ''கோடி வேட்டி'' அல்லது ''புதிய வேட்டி'' எனப்படும். இவை திருமணங்கள் போன்ற விசேடங்களில் பயன்படுத்தப்படும். சில குறிப்பிட்ட நோன்பு சமயங்களில் [[நீலம்]], [[கருப்பு]], [[சிகப்பு]] அல்லது [[காவி]] நிறங்களில் வேட்டி உடுத்துவர். திருமணத்தின் போது பெரும்பாலும் பட்டு வேட்டி பயன்படுத்தப்படும்.
 
பண்டைய காலத்தில் வாழ்ந்த [[அரசர்| அரசர்களும்]] [[புலவர்| புலவர்களும்]] தங்களுடைய வேட்டிகளில் [[தங்கம்|தங்கத்திலான]] சரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும், அதன் விலையும் அதிகமாகவே இருக்கும்.
 
வேட்டிகளில்வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம் வேட்டி, எட்டு முழம் வேட்டி, கரை வேட்டி போன்றவைகள் அதனுடைய வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக் கட்டுவர். இது ''பஞ்சக்கச்சம்'' எனப்படுகிறது. அரசயல்வாதிகள் தங்கள் வேட்டிக் கரைகள் தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவது அண்மைய வழக்கமாக மலர்ந்துள்ளது.
 
வேட்டி அணியும் போது, அதனுடன் [[துண்டு]] அணியும் வழக்கம் உண்டு. தமிழ்த் திருமணங்களில் [[மணமகன்]] தன்னுடைய தோளில் இத்துண்டினை அணிந்திருப்பார். கோவில் பணிகளில் ஈடுபடுவோர் வேட்டி அணிந்திருப்பர். வேளாண் மக்களும் வேட்டியுடன் துண்டினைப் பயன்படுத்துவர். துண்டினை வேலை செய்யும் போது தலையிலும், உட்காரும்போதும் நடக்கும்போதும் தோளிலும், கோவில்களில் வழிபாடு செய்யும் போது இடுப்பிலும் கட்டியிருப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது