கர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
No edit summary
வரிசை 4:
: ''ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்''
 
என்கிறது [[யஜுர் வேதம்|யஜுர் வேதத்தில்]] காணப்படும், [[பிரகதாரண்யக உபநிடதம்|பிரகதாரண்யக உபநிடதம்]] 4.4.5
 
கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது. நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே வினைப்பயன். இந்த வினைப்பயன், சஞ்சித கர்மம் (சேமித்த வினைப்பயன்), பிராரப்த் கர்மம் (செயல்படுகின்ற வினைப்ப்யன்) மற்றும் ஆகாமிய கர்மம் (வர இருக்கின்ற வினைப்பயன்) என மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.
 
==சஞ்சித கர்மம் அல்லது சேமித்த வினைப்பயன்==
தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது '''ஊழ்வினை''' என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார்.
இது நல்வினை மற்றும் தீவினை அனைத்தின் தொகுதி. வரும் பிறவிகளில் செயல்படப் போவது இவ்வினைப்பயனே. இந்தப் பிறவியில் இவ்வினைப்பயன் செயல்படாத நிலையில் உள்ளது. இதிலிருந்து ஒரு பகுதிதான் பிராரப்த கர்மமாக ஒரு குறிப்பிட்ட பிறவியில் செயல்படுகிறது.
 
==பிராரப்த கர்மம் அல்லது செயல்படுகின்ற வினைப்பயன்==
ஒரு குறிப்பிட்ட பிறவியில், அந்தப் பிறவிக்கு ஏற்ற வினைப்பயன்கள் மட்டும் செயல்படுகின்றன். அவ்வாறு ஒரு பிறவியில் செயல்படத் தொடங்கியுள்ள வினைப்பயனே இது.
 
==ஆகாமிய கர்மம் அல்லது வர இருக்கின்ற வினைப்பயன்==
வினைப்பயனின் விளைவாக இப்பிறவி அமைந்தாலும், வினைப்பயன் அனுபவிக்கின்ற வேளையிலே புதிய வினைப்பயன்கள் சேர்கின்றன. இவ்வாறு ஒரு பிறவியில் சம்பாதிக்கின்ற வினைப்பயன் ஆகாமிய கர்மம் எனப்படுகிறது. இது செயலின் தன்மைக்கு ஏற்ப இந்தப் பிறவியில் பலன் தந்தாலும் தரலாம்: அல்லது, சஞ்சித கர்மத்துடன் சேர்க்கப்பவும் செய்யலாம்.
 
==கர்மங்களின் பலன்==
[[வேதாந்தம்|வேதாந்த தத்துவத்தின்படி]] தீவினைகள் செய்தவர்கள், மறுபிறவியில் கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், பித்ரு லோகம் போன்ற மேலுலகங்களுக்குச் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும்
[[பிறவிச்சுழற்சி|பிறவிச்சுழற்சியில்]] இருந்து தப்பி, பிறப்பில்லா பெருவாழ்வு அடைய இயலாது. எனவே பிறப்பிலா பெருநிலையை அடைய, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவ்னை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம்,[[தியாகம்]], [[தவம்]] போன்ற நற்குணங்களுடன் [[குரு]] மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் [[ஆத்மா|ஆத்மாவை]] அறிந்து [[விதேக முக்தி|மன அமைதி]] பெறுதலே மரணமிலாப் பெருவாழ்வு நிலை அடையவேண்டும்.
 
==தமிழ் இலக்கியத்தில் ஊழ்வினை அல்லது வினைப்பயன்==
தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது '''ஊழ்வினை''' என்று தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. [[திருவள்ளுவர்]] 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். [[இளங்கோ|இளங்கோவோ]] ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார்.
 
== அறிவியல் நோக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/கர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது