தொலுயீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொலுயீன் நீரிற் கரைவது குறைவு. *உரை திருத்தம்* ஆதாரம் கீழே (edited with ProveIt)
வரிசை 70:
தொலுயீன் (''Toluene'') என்னும் [[வேதிப்பொருள்]] மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane) என்றும் அழைக்கப்படும்.<ref>{{cite web | url=http://www.npi.gov.au/resource/toluene-methylbenzene | title=Toluene (methylbenzene) | publisher=National Pollutant Inventory | accessdate=2015 சனவரி 22}}</ref> இது [[பென்சீன்|பென்சீனைப்]] போலவே அறுகோண [[கரிமம்|கரிம]] வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு [[ஹைட்ரஜன்]] இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH<sub>3</sub>) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன், நீரில் அரிதிற் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் [[நீர்மம்|நீர்மப்]] பொருள்.<ref>{{cite web | url=http://www.epa.gov/chemfact/f_toluen.txt | title=CHEMICALS IN THE ENVIRONMENT: TOLUENE (CAS NO. 108-88-3) | publisher=U.S. ENVIRONMENTAL PROTECTION AGENCY | date=1994 ஆகத்து | accessdate=2015 சனவரி 22}}</ref> இந்த நெடி அல்லது மணமானது கதவுகள், சன்னல்கள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் இருந்து வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் [[அரோமாட்டிக் ஹைடிரோகார்பன்]] (மணம்வீசும் கரிம-நீரதை) பல தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது.
 
==பெயர்வரலாறு ==
==வரலாறு ==
[[வட அமெரிக்கா|அமெரிக்க]] [[மரம்|மரமாகிய]] மைராக்சிலன் பால்சாமம் (Myroxylon balsamum) என்னும் மரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மணம் தரும் தொலூல் (toluol) என்னும் தொலூல் பால்சம் (toluol balsam) என்பதில் இருந்து தொலுயீனை முதன்முதல் பெற்றதால் இப்பெயர் பெற்றது. இப்பெயரை முதலில்
யோன்ஸ் யாக்கொப் பெர்செலியஸ் (Jöns Jakob Berzelius) பயன்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/தொலுயீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது