ரிச்சர்ட் ஸ்டால்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
{{Link FA|ast}}
ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Sallma) – மார்ச் 16
ஜீ என். யு. மென்பொருளை அறிமுகப்படுத்தியவரும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். நியுயார்க் நகரில் பிறந்தவர் (1953). அப்பா ஒரு பிரின்டிங் பிரஸ் புரோக்கர். சிறு வயதிலிருந்தே கம்ப்யூட்டர்களில் ஆர்வம் கொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளில் பயின்றபோது ஐ.பி.எம். கையேடுகளைப் படித்து முடித்து விட்டார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான சனிக்கிழமை கம்ப்யூட்டர் வகுப்புகளில் சேர்ந்தது இவரது கணினி ஆர்வத்தை பெருக்கெடுக்க வைத்தது.
1969-ல் தனது முதல் புரோகிராமை ஐ.பி.எம். நியுயார்க் அறிவியல் மையத்தில் ஐ.பி.எம். 360 கணினியில் எழுதினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆய்வுக்கூடத்தில் தன்னார்வ உதவியாளராக இருந்தார். கணிதத்திலும் இயற்பியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 1970-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
முதலாண்டில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் எம்.ஐ.டி.யில் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்தில் (ஏ.ஐ.எல்.) புரோகிராமராக இருந்தார். கல்லூரியில் இவர் ஆர்.எம்.எஸ். என்று அழைக்கப்பட்டார். 1974-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார். எம்.ஐ.டி.யில் ஏ.ஐ. ஆய்வுக்கூடத்தில் ஹாக்கராக இருந்தார். அப்போது டி.இ.சி.ஓ, இமாக்ஸ் மற்றும் லிஸ்ப் மெஷின் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆகிய மென்பொருள் திட்டங்களை மேம்படுத்தினார்.
மென்பொருள் சுதந்தரம் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். சுதந்தரத்துடன் கணினியைப் பயன்படுத்துவது என்பதை இலக்காக கொண்டு சுதந்தர மென்பொருள் இயக்கத்தை இவர் தொடங்கினார். தனி உரிமை மென்பொருட்களோ (Proprietary Software) அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சுதந்தரத்திற்கு எதிரான எதையும் இவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவை பல மோசமான அம்சங்கள் கொண்டுள்ளது என்று கூறும் இவர், இவை பயனாளர்களை உளவு பார்க்கிறது. அவர்களைக் கட்டுப்படுத்துகிறது என்கிறார். மென்பொருட்களை பயனாளிகள் சுதந்தரமாகப் பயன்படுத்துதல், ஆய்வு செய்தல், விநியோகித்தல், மாற்றங்களை கொண்டுவருதல் ஆகிய உரிமைகளைப் பெறவேண்டும் என்பதே இவரது நோக்கம். இதைத்தான் இவர் சுதந்தர மென்பொருட் என்று குறிப்பிடுகிறார்.
மென்பொருள் இயக்கத்தின் சுதந்தரம் பற்றி பிரசாரம் செய்து வந்தார். ஜி.என்.யு. பிராஜக்ட் மற்றும் ஃப்ரீ சாஃப்ட்வேர் மூவ்மன்ட், தி டேஞ்சர்ஸ் ஆஃப் சாஃப்வேர் பேடன்ஸ் மற்றும் காபிரைட் அன்ட் கம்யூனிட்டி இன் தி ஏஜ் ஆஃப் கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றை குறித்து பேசினார். தான் நினைத்த பணியை செய்து முடிப்பார். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்.
உலகம் முழுவதும் 65 நாடுகளுக்கும் மேல் பயணம் மேற்கொண்டுள்ளார். தான் போகும் நாடுகளில் எல்லாம் பெரும்பாலும் இவர் ஃப்ரீ சாஃப்ட்வேர் மற்றும் ஜி.என்.யு. திட்டம் பற்றி பேசி வருகிறார். ஃப்ரீ ஆஸ் இன் ஃபிரீடம் என்ற நூல் இவருடைய வாழ்க்கை வரலாறை அறிய உதவும் நூலாகத் திகழ்கிறது. இவர் மேம்படுத்திய க்னூ (GNU பிராஜக்ட்), கட்டற்ற மென்பொருள் அடிப்படையில் அமைந்த முழுமையான இயங்குதளம் ஒன்றினை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட செயல் திட்டம்.
இதை இவர் 1983-ல் வெளியிட்டார். இதைத் தவிர, ஃப்ரீ சாஃப்ட் வேர் ஃபவுன்டேஷன், ஜி.என்.யு, கம்ப்ளையர் கலெக்ஷன் மற்றும் ஜி.என்.யு. இ மாக்ஸ் மற்றும் ஜி என் யு. ஜெனரல் பப்ளிக் லைசன்ஸ் இவற்றையும் தொடங்கியவர். மென்பொருட்களையும் மென்பொருள் உரிம ஒப்பந்தங்களையும் உருவாக்குவது போலவே க்னூ திட்டம் பெருமளவில் தத்துவம் சார் எழுத்தாக்கங்களை வெளியிட்டு வருகிறது.
தனது வாழ்வின் பெரும்பகுதியை அரசியல் மற்றும் மென்பொருள் இயக்கங்களுக்காக செலவிட்டு வருபவர். எனக்கு எப்போதுமே பணம் முக்கியமாக இருந்ததில்லை, அதன் கட்டுப்பாட்டில் இருக்க நான் விரும்பியதில்லை. என்று கூறுவார். தற்போதும் தனியுரிமை மென்பொருளுக்கு எதிராகப் போராடியும் பேசியும் வருகிறார்.
எனது மென்பொருள் சுதந்தர இயக்கத்திற்கு மஹாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோர்தான் எனக்கு ஊக்கமளிப்பவர்கள் என்று கூறுகிறார். இவரது பணிகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சர்ட்_ஸ்டால்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது