குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|de}} →
வரிசை 5:
'''குருதி''' என்பது [[விலங்கு|விலங்கினங்களின்]], [[உடல்]] [[உயிரணு]]க்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு [[உடல் திரவம்]] ஆகும். குருதியானது [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] எனப்படும் [[குருதிக் கலன்]]கள் (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற [[நீர்மம்|நீர்மப்]] பொருள். தமிழில் குருதியை '''அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர்''' என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். <br />
<br />
குருதியானது [[மூளை]]க்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் [[காபனீரொக்சைட்டு]], [[லாக்டிக் அமிலம்]] போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.
 
குருதி என்பது [[சிவப்பு அணுக்கள்]], [[வெள்ளை அணுக்கள்]], [[குருதிச் சிறுதட்டுக்கள்]] கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, குருதிச் சிறுதட்டுக்கள்) 1%.
 
[[மனிதர்|மனிதரின்]] உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் [[குருதிப்பெருக்கு|குருதிப்பெருக்கினால்]] குருதியிழப்பு ஏற்படும்போது அது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.
வரிசை 16:
{{main|குருதி நீர்மம்}}
[[குருதி நீர்மம்]] என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், குருதிச் சிறுதட்டுக்களும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன.
குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுப்பொருட்கள் சிலவாகும்.
 
குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் [[வெண்ணி (புரதம்)|ஆல்புமின்]] (albumin), [[நாரீனி (புரதம்)]] (fibrinogen), [[நுண்குளியம் (புரதம்)|குளோபுலின்]] (globulin), என்பவை சில. [[வெண்ணி (புரதம்)|ஆல்புமின்]] என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இதன் முக்கிய தொழில் குருதியில் [[சவ்வூடு பரவல் அழுத்தம்|சவ்வூடு பரவல் அழுத்தத்தைச்]] சீராக வைத்திருத்தல் ஆகும். இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து குருதி கசிந்து வெளியேறி அருகிலுள்ள [[இழையம்|இழையங்களினுள்]] சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் [[புரதம்]] இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகி [[குருதி உறைதல்|குருதி உறைந்து]], மேலதிக [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நாரீனி இல்லையெனில் [[குருதி உறையாமை]] ஏற்படும். நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது [[பிறபொருளெதிரி]]யாகும். இது [[நோந் எதிர்ப்பாற்றல் முறைமையின் பகுதியாக இருந்து, [[நோய்த்தொற்று]]க்களுக்கு எதிராகத் தொழிற்படும்.
வரிசை 74:
 
[[பகுப்பு:குருதி]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது