பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Reacció en cadena de la polimerasa is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|ca}} → (2)
வரிசை 21:
 
== செயல்முறை ==
மரபு நூலிழையில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பெருக்குவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது. இலக்குப் பகுதியானது பொதுவாக 0.1-10 கிலோ தாங்கிச் சோடிகளைக் (kilo base pairs - kb) கொண்டதாக இருக்கும். ஆனாலும் ஒரு சில தாக்கங்கள் 40 கிலோ தாங்கிச் சோடிகள் வரை பெருக்கும் தன்மை கொண்டன.<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC44063/ | title=Effective amplification of long targets from cloned inserts and human genomic DNA | publisher=NCBI | work=Proceedings of the National Academy of Sciences of the United States of America | date=1994 June 7 | accessdate=பெப்ரவரி 16, 2014 | author=S Cheng, C Fockler, W M Barnes, and R Higuchi | pages=91(12): 5695–5699}}</ref> குறிப்பிட்ட பகுதியின் பெருக்கமானது வழங்கப்படும் பொருட்களின் அளவில் தங்கியிருக்கும். செயற்பாட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் ஒரு வரம்பிற்குள் இருப்பதனால், செயற்பாடும் ஒரு நிலைக்குப் பின்னர் நின்றுவிடும்<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3365123/ | title=Robust Quantification of Polymerase Chain Reactions Using Global Fitting | publisher=NCBI | work=PLoS One. | date=2012 May 31 | accessdate=பெப்ரவரி 16, 2014 | author=Ana C. Carr and Sean D. Moore* | pages=7(5)}}</ref>. <br />
 
தாக்கம் நிகழும் கலவையின் கனவளவானது 20μL - 200μL வரை வேறுபடும். <ref name="BABEC">{{cite web | url=http://www.babec.org/files/PCR_2012/PCR_Optimization_Student_Guide_2012.pdf | title=PCR Optimization Student Guide, Fall 2012 | publisher=Applied Biosystems | work=BABEC, | accessdate=பெப்ரவரி 17, 2014}}</ref>. இந்தக் கலவையானது 0.2–0.5 மி.லீ கனவளவுள்ள சோதனைக்குழாயில் எடுக்கப்பட்டு, வெப்பச் சுழற்சிக் (thermo cycler) கருவியொன்றினுள் தாக்கம் நிகழ்வதற்காக வைக்கப்படும். இந்தக் கருவி சோதனைக் குழாய்களின் வெப்பத்தைக் கூட்டியும், குறைத்தும், ஒவ்வொரு படிநிலையிலும் தாக்கத்திற்குத் தேவையான வெப்பத்தை வழங்குகின்றது. மிக மெல்லிய சுவரைக் கொண்ட இந்தச் சோதனைக் குழாய்கள், மாறும் வெப்பத்தை இலகுவாகக் கலவைக்குக் கடத்துவதனால், கலவையில் நிகழ வேண்டிய வெப்ப மாற்றம் மிக விரைவாக நிகழ்ந்து, மிகவும் குறுகிய நேரத்தில் வெப்பச் சமநிலைக்கு வருவதற்கு உதவும். குழாய்களை மூடியிருக்கும் கருவியின் மூடி சூடாக வைத்திருக்கப்படுவதனால், மூடியில் ஒடுங்குதல் மூலம் கலவையின் நீர்மப் பொருட்கள் படிதல் தவிர்க்கப்படும்.
இந்த செயல்முறையின் முக்கிய படிநிலைகளான பிரித்தல், சேர்த்தல், நீட்டித்தல் ஆகிய மூன்றும், மீண்டும் மீண்டும், மாறி மாறி வரும் வெப்பநிலை மாற்றங்களை உள்ளடக்கிய பல சுழற்சிகளைக் கொண்ட செயல்முறையாகும். பொதுவாக 20-40 சுழற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தச் செயல்முறையில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வெப்பநிலைகளும், அவை பயன்படுத்தப்படும் நேரமும் பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கும். அவையாவன: பயன்படுத்தப்படும் நொதியின் தன்மை, கலவையினுள் இரு வலு அயனிகளினதும், டி.என்.டி.பி க்களினதும் (dNTPs) செறிவு, முன்தொடரிகளின் உருகுநிலை (T<sub>m</sub>)<ref>{{cite journal | author=Rychlik W, Spencer WJ, Rhoads RE| title=Optimization of the annealing temperature for DNA amplification in vitro| journal=Nucl Acids Res| year=1990 | pages=6409–6412|volume=18|pmid=2243783 | doi = 10.1093/nar/18.21.6409 | issue=21 | pmc=332522}}</ref>
வரிசை 33:
 
=== சேர்த்தல் ===
இந்தப் படிநிலையில் வெப்பநிலையானது குறைக்கப்பட்டு, குளிராக்கப்படும். 50–65 °செ வெப்பநிலையில், கிட்டத்தட்ட 20–40 செக்கன்களுக்குக் கலவை பேணப்படும். இந்த வெப்பநிலையானது பொதுவாக முன்தொடரிகளின் உருகுநிலையை (T<sub>m</sub>) விட 3-5°செ குறைவாக இருக்கும்.
 
இந்நிகழ்வில் பிரிக்கப்பட்ட மரபு நூலிழைகள் ஒவ்வொன்றின் முடிவுப் பகுதியில், அவற்றிற்கென உருவாக்கப்பட்ட முன்தொடர்கள் (primers) இணைந்து கொள்ளும். இந்த முன்தொடர்கள், குறிப்பிட்ட மரபு நூலிழையில் எந்தப் பகுதி அதிகளவில் பெறப்பட வேண்டுமோ அந்தப் பகுதியின் முடிவிலிருக்கும் நியூக்கிளியோட்டைட்டு தொடரியிலுள்ள (nucleotide sequence) தாங்கிகளுக்கான (bases) குறைநிரப்பு (complementary) தாங்கிகளைக் கொண்ட நியூக்கிளியோட்டைட்டு தொடரியைக் கொண்டதாக இருக்கும். இந்தத் தன்மையால் அவை மரபு நூலிழையில் இலகுவாக இணைந்து கொள்ள முடிகின்றது. இந்தத் தாக்கம் நிகழும் வெப்பநிலையானது முன்தொடரிகளின் தன்மையில் தங்கியிருக்கும். அதாவது முன்தொடரிகளிலுள்ள தாங்கிகளின் எண்ணிக்கை, வெவ்வேறு தாங்கிகளின் விகிதம் என்பவற்றில் தங்கியிருக்கும்.
வரிசை 40:
இந்நிகழ்வில் மரபு நூலிழை பல்கி நகலாக பெருக்கப்படும் (Amplification). வெப்பநிலை 75–80°செ அமைக்கலாம். டி. என். ஏ. பாலிமரேசு நொதி உயர் வெப்பநிலையில் (எரிமலையில்) வாழும் பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால், இந்நொதியின் செயற்பாடுகளுக்கு உகந்த வெப்பநிலை 75–80°செ ஆகும்<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite journal|author=Lawyer FC, Stoffel S, Saiki RK, Chang SY, Landre PA, Abramson RD, Gelfand DH.|year= 1993|title=High-level expression, purification, and enzymatic characterization of full-length Thermus aquaticus DNA polymerase and a truncated form deficient in 5' to 3' exonuclease activity.|journal=PCR Methods Appl.|volume=2|pages=275-87|pmid=8324500|issue=4|pmc=}}</ref>, குறைவான வெப்பநிலையில் இத்தகு பாலிமரேசு தொடர்வினைகள் சிறப்பாக நிகழ்வதில்லை.
 
பயன்படுத்தப்படும் நொதியின் செயற்படுதிறன் எந்த வெப்பநிலையில் மிகச் சிறப்பாக இருக்குமோ, அந்த வெப்பநிலை இங்கே தெரிவு செய்யப்படும். [[:en:Taq polymerase]] ஆயின் அதன் செயற்படுதிறன் 75–80°செ வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும்.<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite pmid|8324500}}</ref>. பொதுவாக 72°செ யே இந்த நொதிக்குப் பயன்படுத்தப்படும். நொதியானது, வார்ப்புரு மரபு நூலிழையின் 5' இலிருந்து 3' திசையில், வார்ப்புருவிலிருக்கும் தாங்கிகளுக்கு குறைநிரப்பு தாங்கிகளைக் கொண்ட புதிய டி.என்.டி.பிக்களை செர்த்துக் கொண்டே போவதனால், தனி மரபு நூலிழை ஒவ்வொன்றிற்கும் குறைநிரப்பு நூலிழைகளை நீட்டித்துக்கொண்டே செல்லும். இதற்கு எடுக்கும் நேரமானது பயன்படும் நொதியிலும். பெருப்பிக்கப்பட வேண்டிய மரபு நூலிழையின் நீளத்திலும் தங்கியிருக்கும். ஆரம்பத்தில் இருக்கும் ஒவ்வொரு டி.என்.ஏ. மூலக்கூறிலிருந்தும், முதலாவது சுழற்சியின் இந்தப் படிநிலையின் முடிவில் இரு டி.என்.ஏ மூலக்கூறுகள் உருவாகும்.
 
இந்தப் படிநிலை முடிந்ததும், மீண்டும் பிரித்தல் படிக்குப் போய், இதுவே சுழற்சியில் மீண்டும் வரும். இரண்டாவது தடவை இந்தப் படிநிலை முடியும்போது 4 டி.என்.ஏ பகுதிகள் கிடைக்கும். அடுத்த சுழற்சியில் 8, பின்னர் 8 இலிருந்து 16, பின்னர் 32 என்று பெருக்கமானது இரண்டின் அடுக்குகளாக (2<sup>n</sup>) அதிகரித்துச் செல்லும்.
வரிசை 65:
 
[[பகுப்பு:மூலக்கூற்று உயிரியல்]]
 
{{Link FA|ca}}
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/பாலிமரேசு_தொடர்_வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது