கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 13:
| fatalities = 152
| injuries =
| perps = இலங்கை இராணுவம்இராணுவமும்,முஸ்லீம் ஊர்காவல்ப் படையினரும்
| susperps =
| weapons = இயந்திரத் துப்பாக்கிகள், கத்திகள், கோடாரிகள்
}}
'''கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991''' கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் யூன் 12, 1991 அன்று மேற்கொள்ளப்பட்ட படுகொலை நடவடிக்கை ஆகும். இதில் தமிழ்ப் பொதுமக்கள் 152 பேர் இலங்கை இராணுவத்தால்இராணுவத்தாலும்,முஸ்லீம் கொல்லப்பட்டனர்.<refஊர்காவல்ப் name=McConnell2008>{{citeபடையினராலும் journalகொல்லப்பட்டனர்.
 
சிங்கள ராணுவமும், முஸ்லீம் ஊர்காவல்ப் படைகளும் சேர்ந்து நடத்திய பல தமிழின கூட்டுப் படுகொலைகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் என்றும் மறந்துவிட முடியாத ஒரு கொடூர இனப்படுகொலை. 28.01.1987 அன்று 83 தமிழ் மக்கள் சிங்களப் படைகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் 1991 யூன் 12ம் திகதி இன்னொரு பாரிய படுகொலையை நடத்தி 152 தமிழ் மக்களை மிகக்கொடூரமாகக் கொன்றது. அந்தப் படுகொலைகளின் அனுபவப் பகிர்வு இது.
 
 
ஈழத் திருநாட்டின் தேன்பாடும் மீன்நாட்டில் இயற்கை அழகுடன் விவசாய செழிமையுடன் பழம் பெரும் கலாச்சார பெருமைகளையும் கொண்டுள்ள கொக்கட்டிச்சோலை என்னும் கிரமாத்தில் இரத்தக் கறைபடிந்த நாட்கள் இன்னும் வடுக்களாக மக்கள் மனங்களில் நிலைகொண்டுள்ளது.
கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்த
வினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் 1987ம் ஆண்டு தை மாதம் 28ம் திகதி சிங்களப் படைக
ளாலும்,முஸ்லீம் ஊர்காவல்ப் படையினராலும் 83 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இத்துடன் இந்த கிராமத்தின் இனப் படுகொலை வெறி நிற்கவில்லை. மீண்டும் 1991ம் ஆண்டு யூன் மாதம் 12ம் திகதி மிகப்பெரும் படுகொலை இடம்பெற்றது.
அந்தப் படுகொலைகளின் போது உயிர் தப்பிய சிலரை சந்திக்கும் சந்தர்ப்பம் 2004ம் ஆண்டு கிடைத்தது. அவர்களு
டன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இன்றும் என் நெஞ்சில் பெரும் சுமையாக கனத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் இரத்தமும் சதையுமான பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கொக்கட்டிச்சோலையில் உள்ள மகிழந்தீவு என்னும் ஊரில் ஒரு வீட்டிற்கு சென்றேன். அங்கு 35 வயது மதிக்கத்
தக்க ஒரு தாய் சில பொருட்களையும், தலையணையையும் வைத்துக் கொண்டு ‘இது என்ரை பிள்ளை... இது என்ரை பிள்ளை’ எனக்கூறிக் கொண்டிருந்தார். அப்பொழுது என்
னுடன் கதைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம், ‘இவர் இப்
படி கூறுவதற்கு என்ன காரணம்’ எனக் கேட்டேன். ‘தனது பிள்ளை இறந்தபின்பு இவருக்கு புத்திசுவாதீனம் ஏற்பட்டு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பதாக’ கூறினார்.
‘இவரின் பிள்ளை ஏன் இறந்தது? வருத்தம் வந்தா இறந்தது?’ என வினவினேன். ‘வருத்தம் வந்து இறக்கவில்லை தம்பி இங்கு பெரிய படுகொலை நடந்தது அதில் நான் எனது கடைசித் தங்கையையும், இவளின்ர பிள்ளையையும், இவளின் கணவரையும் பறிகொடுத்தோம். அவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் இவளையும் கொலை செய்திருந்தால் இவள் இப்படி கஸ்ரப்பட தேவையில்லை என்றார்.
1991ம் ஆண்டு எனது எனது இந்த இரண்டாவது தங்
கைக்கு குழந்தை கிடைத்தது. அவளின் உதவிக்கு 14 வயதுடைய எனது கடைசித் தங்கை உதவிக்கு இருந்தாள். அன்றுதான் இப்படி ஒரு கொடுமை நடந்தது. தங்கையின் கணவர் இறால்வாடி வேலைக்குப் போய்விட்டார். திடீரென்று வெடிச் சத்தம் கேட்டது. 1987ம் ஆண்டும் இப்படித்தான் ஆமியும்,சோனியும் சுட்டு 83 பேரை கொலை செய்தாங்கள். இப்பவும் அப்
படி வெடிச் சத்தம் கேட்க மரண பயத்துடன் படுகாமம் பக்கம் ஓடினோம்.
வெடிச்சத்தம் ஓய்ந்ததும் நாங்கள் கொஞ்சபேர் ஒன்றாக ஊருக்கு வந்தோம். அங்கே வந்தபோது வீதி எங்கும் பிணக் காடாக காட்சி தந்தது. எங்கும் அவலக் குரல். இன்னும் என் தங்கையைக் காணவில்லை என அவளின் வீட்டிற்குப் போனால் அங்கு நான் கண்ட காட்சி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னால் மறக்க முடியாது. அந்த அவலத்தைப் பார்த்த பின்பும் இன்னும் ஏன் உயிருடன் இருக்கிறேன் என்று கூறியவாறு அழத் தொடங்கிவிட்டார்.
அந்த அம்மாவை என்னால் தேற்ற முடியவில்லை. ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தார்.
வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றால் எனது கடைசித் தங்கை அலங்கோலமாக இறந்து கிடந்தாள். அவள் இறந்து கிடந்த காட்சியே அவள் சிங்கள,முஸ்லீம் படைகளின் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளாள் என்
பதை உணர்த்தியது. அதேவேளை பக்கத்து அறையில் யாரே முனங்கும் சத்தம் கேட்டு அங்கு சென்றால் எனது இரண்டாது தங்கை இவள் இரத்த வெள்ளத்தில் குற்றுயிராக கிடந்தாள். அவளை வைத்தியசாலைக்கு தூக்கி அனுப்பி
விட்டோம். பிறந்து சில நாட்களே ஆன அவளின் குழந்தை இறந்துகிடந்ததை எந்தக் கல் நெஞ்சமும் தாங்காது. பிறந்து சில நாட்களேயான அந்தக் குழந்தையைத் தூக்கி சுவற்றில் அடித்து கொலை செய்திருந்தார்கள்.
இந்த அவலத்துடன் தங்கையின் கணவரைத் தேடிச் சென்றோம். செல்லும் வழியில் வந்தவர்கள் வாடியிலும் இராணுவம் சுட்டதாக சொன்னார்
கள். அங்கு சென்று பார்த்தால் அங்கு வேலைசெய்த அனை
வருமே கொல்லப்பட்
டிருந்தனர். அங்கு எனது தங்கையின் கணவரின் உடலையும் கண்டோம்.
தங்கையாவது பிழை
த்து விட்டாள் என எண்ணி வைத்தியசா
லைக்கு சென்றால், அவளது வாயின் மீது துப்பாக்கியினால் தாக்
கியதில் மேல்வாய் பற்
கள் எதுவும் இல்லை. அதன் பின் துப்பாக்கியினால் அவள் மீது துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளார்கள். குண்டு மார்புப் பகுதியில் சாய்வாகச் சென்றுள்ளது. அவளும் இறந்
துவிட்டதாக நம்பியே படையினர் அங்கிருந்து நகர்ந்துள்
ளனர். உயிர்தப்பியவள் இப்போது நடைப்பிணமாகிவிட்டாள். சித்தசுவாதீனத்துடன் எப்போதும் தனது பிள்ளையென தலையணை வைத்துக் கொஞ்சுவதாக மாறிவிட்டாள் எனக்கூறி கதறத் தொடங்கிவிட்டார்...
 
<ref name=McConnell2008>{{cite journal
 
 
 
| author = McConnell, D.
| year = 2008
"https://ta.wikipedia.org/wiki/கொக்கட்டிச்சோலைப்_படுகொலைகள்,_1991" இலிருந்து மீள்விக்கப்பட்டது