செவ்வாய் (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
| [[நெயோன்]]<br />[[கிரிப்டோன்]]<br />[[க்செனொன்]]<br />[[ஓசோன்]] || Trace
|}
'''செவ்வாய்''' (''Mars'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] உள்ள ஒரு [[கோள்]] ஆகும். இது [[சூரியன்|சூரியனிலிருந்து]] நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான [[புதன்|புதனுக்கு]] அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் [[இரும்பு ஆக்சைடு]] இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.<ref name="nasa_hematite" /> இதனாலேயே இதற்குச் ''செவ்வாய்'' என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு [[புவிசார் கோள்|புவிசார் கோளான]] இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் [[கிண்ணக்குழிகிண்ணக் குழி]]களையும், புவியில் உள்ளது போன்ற [[எரிமலை]]கள், [[பள்ளத்தாக்கு]]கள், [[பாலைவனம்|பாலைவனங்கள்]], பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் [[சுழற்சிக்காலம்|சுழற்சிக்காலமும்]], பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்துள்]] மிக உயரமான [[ஒலிம்பசு மலை]]யும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான [[மரினர் பள்ளத்தாக்கு]]ம் செவ்வாயிலேயே உள்ளன.
 
1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக [[மரினர் 4]] வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை [[கடல்]]களும், [[கண்டம்|கண்டங்களுமாக]] இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு [[ஒளியியல் மாயத்தோற்றம்]] என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.<ref name="marswater" />
"https://ta.wikipedia.org/wiki/செவ்வாய்_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது