அறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''அறம்''' (Dharma) என்பது ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில், பல்வேறு சூல்நிலையில் கடைபிடிக்கவேண்டிய வாழ்வியல் நெறிகள் எனப் பொதுவாக குறிப்பிடலாம். அறம் என்றச் சொல் நல்ல பண்பை உணர்த்தும், நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும். இதற்கு இணையான சொல் வடமொழியில் '''தர்மம்''' என்றும் பாலி மொழியில் '''தம்மா''' என்று அறியப்பட்டாலும், வேறு மொழிகளில் இதற்கு இணையான சொல் இல்லை என்றே குறிப்பிடலாம். ஒரு மனிதக்குழு தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் நெறிகள், செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை, செய்தே ஆக வேண்டியவை அடங்கிய ஒரு வழிக்காட்டித் தொகை அதுவே அறம். அற முறைமையில் செயற்படும் போது தனியன்கள் எதிர்பார்க்கக் கூடிய வகையிலும், ஒத்திசைவாகவும், முரண்பாடுகளை குறைக்கும் வண்ணமும் செயற்படுவர் என்பது எதிர்பாப்பு ஆகும்.<ref>Johnna Fisher (தொகுப்பு). (2009). Biomedical Ethics: A Canadian Focus.</ref> நெடுங்காலமாக அறம் மெய்யியல் நோக்கில், சமய நோக்கில் ஆயப்பட்டு வந்துள்ளது. அண்மைக்காலத்தில் அறம் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றியும் ஆயப்படுகிறது.
'''ஒழுக்கநெறி''' (Morality) என்பது நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், [[பண்பாடு]] என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. ஒழுக்கநெறிகள், [[சமூகம்]], [[மெய்யியல்]], [[சமயம்]], தனிமனிதரின் [[மனச்சாட்சி]] போன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன.
 
நெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான "விதிமுறை" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே "கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
== இவற்றையும் பார்க்க ==
* [[நாற்பொருள்]]
* [[:en:Ethics]]
 
[[பகுப்பு:ஒழுக்கநெறிகள்]]
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://ennappinnalgal.blogspot.com/2005/10/blog-post_24.html வள்ளுவர் அறம், அறவினை போன்றவற்றை வரையறுக்கிறாரா?]
 
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:அறம்]]
[[பகுப்பு:பௌத்தம்]]
"https://ta.wikipedia.org/wiki/அறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது