புத்த விகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
==புத்த விகாரம்==
[[File:Buddha's ashes Stupa, Vaishali, Bihar.jpg|thumb|right|350px|புத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண், [[வைசாலி, பண்டைய நகரம்]]]]
 
பௌத்தர்களும் சமணர்களும் தங்கள் சமயப் பெரியார்களின் ஈமச்சின்னங்களைப் புதைத்தவிடங்களில் ஒரு மேடையமைத்து அதன்மீது உருண்டை வடிவ மேடு கட்டுவர். இதனை ஸ்தூபம் அல்லது ஸ்தூபி என்றழைப்பர். இவை காலங்களுக்கும், இடங்களுக்குமேற்ப சிற்சில மாறுதல்களுடன் உள்ளன. ஸ்தூபி, புத்தரது பரிநிர்வாணத்தைக் குறிக்கும் புனிதச் சின்னம். எனவே அது வழிபாடு பொருளாயிற்று. [[புத்தர்]] பரிநிர்வாணமடைந்ததும் அவரது ஈமச்சின்னங்களைப் புதைத்த இடங்களில் செங்கல்லாலும், மணலாலும் எட்டு மகா ஸ்தூபிகளை நிறுவியதாக பௌத்த நூல்கள் கூறும். ஆனால் அவை காலத்தால் அழிந்துபோகவே, [[அசோகர்]] அவற்றைப் புதுப்பித்து ஸ்தூபி வழிபாட்டு மரபிற்கு ஊக்கமளித்தார். காலப்போக்கில் ஸ்தூபியைப் பாதுகாக்க அதன்மீது மரங்களாலும், ஓலைகளாலும் கூரை வேய்ந்தனர். இத்தகைய கூரைக்கட்டங்கள் இன்று இல்லை என்றாலும், இவற்றின் அமைப்பின் அடிப்படையில் மேற்கத்தியக் குன்றுகளில் குடையப்பட்ட குடைவரைகளை இன்றும் [[அஜந்தா குகைகள்]], [[எல்லோரா]] ஆகிய இடங்களில் காணலாம்.<ref> ஆர்.வெங்கட்ராமன், இந்தியக்கோவில் கட்டிடக்கலை வரலாறு, என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, 1983 </ref>
"https://ta.wikipedia.org/wiki/புத்த_விகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது