தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Inrine (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் [[இந்தியா|இந்தியாவில்]] ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையமாகும்.
==தோற்றம்==
இந்திய அரசாங்கம் பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து ஆகஸ்ட் 1999ல் ஓர் உயர் ஆற்றல்மிக்க குழுவை (High-Powered Committee) அமைத்தது. 2001 குஜராத் பூகம்பத்திற்கு பிறகு பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பரிந்துரைகளை செய்ய ஒரு தேசிய குழு அமைக்கப்பட்டது. பத்தாவது [[இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்|ஐந்தாண்டு]] திட்ட ஆவணத்திலும் , முதல் முறையாக, பேரிடர் மேலாண்மை தொடர்பாக ஒரு விரிவான அத்தியாயம் இருந்தது. இதேபோல், பன்னிரண்டாவது [[இந்திய நிதி ஆணையம்|நிதி ஆணையம்]] பேரிடர் மேலாண்மையின் நிதி ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உரிமைக் கட்டளை இடப்பட்டது. 23 டிசம்பர் 2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில் , பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.<ref>{{cite web | title = Evolution of NDMA
| url = http://ndma.gov.in/ndma/evolution.html | accessdate = 16 அக்டோபர் 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பேரிடர்_மேலாண்மை_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது