சச்சின் டெண்டுல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விருது வார்ப்புருக்கள் அனைத்தும் பகுப்புகளுக்கு மேல் இடப்படுகிறது
சி பக்க மேம்பாடு (+ வார்ப்புரு -பகுப்பு -பிழைநீக்கம்)
வரிசை 128:
[[படிமம்:Tendulkar six.jpg|thumb|250px|left| டெண்டுல்கர் ஆடுகளத்தில்]]
* 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் (ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
 
* 1994 செப்டம்பர் ஒன்பதாந்திகதி ஒரு நாள் அனைத்துலகப் போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
 
* 1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் இரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சச்சின் அரையிறுதியில் 65 ஓட்டங்களை குவித்தார்.
 
* 1998இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய தேர்வுத் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார். அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்துக் கோப்பையை தனி ஒருவராக{{சான்று தேவை}} பெற்றுத் தந்தார்.
 
* 1999இல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகித்தானுக்கு எதிரான தேர்வுப் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ஓட்டங்களைக் குவித்தார். அப்போட்டியில் கடைசி நான்கு இலக்குகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
 
* 1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் சிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியில் பங்கேற்காமல் இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பிக் கென்யாவிற்கு எதிராக 141 ஓட்டங்களைக் குவித்தார். அந்தச் சதத்தைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
 
* 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களைக் குவித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறக் காரணமானார். இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் சச்சின் தொடர் நாயகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
* [[திசம்பர் 10]], 2005 அன்று [[சுனில் காவஸ்கர்|கவாஸ்கரின்]] தேர்வுச் சதங்கள் (34) சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
 
* 2007-2008இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்துத் தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
 
* 2008ஆம் ஆண்டு அக்டோபர் 17இல் உலகில் மேற்கு இந்தியத் தீவு ஆட்டக்காரர் இலாராவின் சாதனையை முறியடித்து தேர்வுத் துடுப்பாட்டத்தில் கூடிய ஓட்டங்கள் (12273 ஓட்டங்கள்-நவம்பர் 10, 2008இன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். தேர்வுப் போட்டிகளின் வரலாற்றில் இது வரை மொத்தம் 51 சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.
 
* ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களுடன் 17598 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (ஆகத்து 2012இல்). அதிகபட்ச ஓட்டம் 200*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.
 
* 24 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறிச் சதங்களைக் கோட்டை விட்டுமிருக்கிறார்.
 
* ஒருநாள், தேர்வு ஆட்டங்களில் சச்சின் பிடிப்பதிலும் சதமடித்துள்ளார், ஒரு நாள் போட்டிகளில் 134 பிடிகளையும் தேர்வுப் போட்டிகளில் 106 பிடிகளையும் பிடித்துள்ளார். மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.
 
* 2011ஆம் ஆண்டு நவம்பர் எட்டாந்திகதி அன்று தேர்வு ஆட்டங்களில் 15000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
வரி 158 ⟶ 145:
 
* இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
 
* 2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆட்ட நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு தேர்வுப் போட்டியில் ஆடத் தடை விதித்தார். ஆனால், தொலைக்காட்சியில் சச்சின் பந்தைத் துடைப்பதாக மட்டுமே தெரிய வந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என்பது வரை பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் அனைத்துலகத் துடுப்பாட்டக் கழகம் தலையிட்டுத் தடையை நீக்கியது (இந்தியப் பாராளுமன்றம் வரை இந்தச் சிக்கல் விவாதிக்கப்பட்டது.).
 
* 2003இல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் அனைத்துலகப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
 
* 2004இல் பாக்கித்தானுடனான தேர்வுத் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் இராகுல் திராவிட் ஆட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்ததால் சச்சினின் இரட்டைச் சதம் சாத்தியமில்லாமல் போனது.
 
வரி 333 ⟶ 317:
== புகழுரைகள் ==
* உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர் டான் [[பிராட்மன்]] சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார்; பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
 
* 1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மெர்வ் ஹியூஸ் அணித்தலைவரான ஆலன் பார்டரிடம் “இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்று கூறியிருக்கிறார்.
 
* ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் [[ஷேன் வோர்ன்]] தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
 
வரி 391 ⟶ 373:
{{பாரத ரத்னா}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
{{பத்மசிறீ விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
வரி 400 ⟶ 383:
[[பகுப்பு:அருச்சுனா விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சச்சின்_டெண்டுல்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது