யானை ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
படையினர் அரேபியாவின் 'தாயிப்' என்ற இடத்தை அடைந்ததும், அங்கு வாழ்ந்திருந்த தகீப் கோத்திர அரேபியர்கள், தம்முடைய கோவிலை அப்ரஹாவின் படைகள் அழித்துவிடுமோ என்று அஞ்சினார்கள். அதனால் அவர்கள் படையினரைச் சந்தித்து, "நீங்கள் தேடி வந்த இடம் இதுவல்ல" என்று கூறி மக்காவைச் சென்றடைய வழிகாட்டி ஒருவனையும் கொடுத்துதவினார்கள். கூட்டிச்சென்ற வழிகாட்டி 'முகம்மிஸ்' என்ற இடத்தில் மரணித்ததனால் அவனின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வெறுப்புக் கொண்ட அரேபியர்கள் அவனுடைய அடக்கத்தலத்தின் மீது கல்லெறிந்து தமது வெறுப்புணர்வைக் காட்டினார்கள். இந்த வழக்கம் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகி்ன்றது.
 
முகம்மிஸில் தரித்து நின்ற அப்ரஹா, தனது குதிரைப் படையினரில் சிலரை மக்காவின் சுற்றுப்புறத்தை அவதானித்து வருமாறு அனுப்பினார். அவர்கள் தாம் செல்லும் வழியில் மக்களிடமிருந்து கைப்பற்றிய பொருட்களை அப்ரஹாவுக்கு அனுப்பி வைத்தனர். அவற்றுள் அப்த்-அல்-முத்தலிபுக்குச் சொந்தமான 200 ஒட்டகங்களும் அடங்கியிருந்தன. இவற்றை அறிந்த மக்காவாசிகள், தாம் அப்ரஹாவோடு யுத்தம் செய்தல் பிரயோசனமில்லாமல் போய்விடும் என்றும், அப்ரஹாவை அவருடைய இடத்திற்குப் போய்ச் சந்தித்தால் வீணே இரத்தம் சிந்துதல் தவிர்க்கப்படலாம் என்றும் நினைத்தனர். இது அப்ரஹா ஏற்கனவே எடுத்திருந்த 'கஃபாவை அழிப்பது மட்டுமே தனது நோக்கம் தாம் யுத்தம் புரிய வரவில்லை' என்ற முடிவுக்குச் சாதகமாக இருந்தது. மக்காவாசிகள் தம்முடைய கோத்திரங்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக அப்த்-அல்-முத்தலிபை அப்ரஹாவைச் சந்திப்பதற்காக அனுப்பினார்கள். அப்த்-அல்-முத்தலிபைக் கண்ட அப்ரஹா, இவர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கின்றார் என நினைத்து வினவுமாறு தமது மொழிபெயர்ப்பாளனுக்கு உத்தரவிட்டார். அந்தமொழிபெயர்ப்பாளனிடம் அப்த்-அல்-முத்தலிப், தங்களுடைய வீரர்கள் எனக்குச் சாெந்தமான 200 ஒட்டகங்களைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள். அவற்றை ஒப்படைக்கவும் என்று வேண்டிக்கொண்டார். அப்ரஹா " நான் உங்களுடைய யாத்திரைத் தலத்தை அழிப்பதற்காக வந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ அதை விடுத்து ஒட்டகங்களை ஒப்படைக்குமாறு கேட்கின்றீரே என்று ஆச்சரியப்பட்டுக் கூறினார். அதற்கு அப்த்-அல்-முத்தலிப், "எனக்குச் சொந்தமானது இந்த 200 ஒட்டகங்கள்தான். கஃபா இறைவனுக்குச் சொந்தமானது. அதை அவன் பாதுகாப்பான்" என்றார். இதைக் கேட்ட அப்ரஹா வியப்புற்று 200 ஒட்டகங்களையும் திருப்பிக் கொடுத்து விடுமாறு கட்டளையிட்டார்.
 
===உசாத்துணை===
"https://ta.wikipedia.org/wiki/யானை_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது