பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
வெவ்வேறு விதமான [[பதின்மக் குறி|பதின்மப் பிரிப்பான்]] குறியீடுகள் வழக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் ('''.''') அல்லது ('''·''') என்ற குறியீடும், ஐரோப்பா உள்ளிட்ட சிலநாடுகளில் (''',''') என்ற குறியீடும் பயன்பாட்டில் உள்ளது.
 
ஒரு பதின்ம எண்ணில் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்க்கம் அமைவது, அவ்வெண்ணின் [[மீப்பெரு முழுஎண் சார்பு|முழுஎண் பகுதி]]; வலப்பக்கம் அமைவது அதன் [[பின்னப் பகுதி]] ஆகும். ஒரு பதின்ம எண்ணானது பின்னப் பகுதியை[[பின்னப்பகுதி]]யை மட்டும் கொண்டிருந்தால் ([[பின்னம்#தகு பின்னங்களும் தகா பின்னங்களும்|தகு பின்னம்]] பதின்மப் பிரிப்பானுக்கு இடப்பக்கத்தில் ஒரு [[பூச்சியம்|பூச்சியத்துடன்]] துவங்கப்படும். இவ்வாறு எழுதுவதால், பதின்மக் குறியை மற்ற நிறுத்தற்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காணமுடியும். குறிப்பாக, அப்பதின்ம எண் ஓர் எதிர்ம எண்ணாக இருக்கும்போது அந்த முழு எண்ணுருவின் குறியையும் அறியமுடியும்.
 
ஒரு பதின்ம பின்னத்தில் பின்னப்பகுதியின் இறுதியில் நீளும் பூச்சியங்கள் தேவையற்றவை; அவை [[மதிப்புறு இலக்கங்கள்|மதிப்பில்லாதவை]]. எனினும் ஒரு எண்ணின் துல்லிய மதிப்பின் நம்பக அளவைக் குறிப்பதற்காக அறிவியல், பொறியியல், மற்றும் [[புள்ளியியல்|புள்ளியியலில்]] இப்பூச்சியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0.080 , 0.08 இரண்டும் எண்ணளவில் சமமென்றாலும், அளவீட்டின்போது இரு நூற்றில் ஒரு பங்கு (±0.005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.08உம், இரண்டாயிரத்தில் ஒரு பங்கு (±0.0005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.080உம் குறிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பதின்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது