அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
முற்றிலும் அமைதிப் பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப்பரப்பு [[நியூகினியா]] தீவாகும். அமைதிப் பெருங்கடலின் பெரும்பாலான [[தீவு]]கள் 30° வடக்குக்கும் 30° தெற்குக்கும், அதாவது [[தென்கிழக்காசிய]]விற்கும் [[ஈஸ்டர் தீவு]]க்கும் இடையே காணப்படுகிறது. [[அமைதிப் பெருங்கடற்படுக்கை]]யின் ஏனைய பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் நீரினுள் மூழ்கி கிடக்கிறது.
 
[[ஹவாய்]], [[ஈஸ்டர் தீவு]], மற்றும் [[நியுஸிலாந்து|நியுஸிலாந்தை]] இணைக்கும் [[பாலினேசியா]]வின் [[பெரிய முக்கோணம்]], [[மார்க்குசாஸ்]], [[சமோவா]], [[தோகிலாவு]], [[டோங்கா]], [[துவாமோத்து]], [[துவாலு]] & [[வால்லிஸ்]], மற்றும் [[புந்தா தீவுகள்]] ஆகிய [[வளைதீவு]]களையும் தீவுக்கூட்டங்களையும் சூழ்ந்துகொண்டுள்ளது. நில நடுக்கோட்டின் வடக்காகவும் [[சர்வதேச காலக் கோடு|சர்வதேச காலக்கோட்டின்]] மேற்காகவும் [[மைக்ரோனேசியத் தீவுகள்|மைக்ரோனேசியத் தீவுகளான]], [[கரோலின் தீவுகள்]], [[மார்ஷல் தீவுகள்]], [[மெரியானா தீவுகள்]] என நிறைய சிறிய தீவுகள் உள்ளன.
 
அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில் உள்ள [[மெலனேசியத் தீவுகள்]] [[நியூகினியாநியூகினி]]வின்யின் ஆதிக்கத்திலுள்ளது. மேலும் [[பிஸ்மார்க் தீவுக்குழு]], [[பிஜி]], [[நியு காலிடோனியா]], [[சாலமன் தீவுகள்]] [[வனுவாட்டு]] ஆகியன மற்ற முக்கிய [[மெலனேசியத் தீவு]]க்கூட்டங்கள்.
 
அமைதிப் பெருங்கடலின் தீவுகள் நான்கு வகைப்படும்: [[கண்டத் தீவுகள்]], [[உயரத் தீவுகள்]], [[ஊருகைத்திட்டு]], உயர்த்தப்பட்ட [[காரல் பரப்புமேடை]]. கண்டத் தீவுகள் [[ஆன்டிசைட் கோடு|ஆன்டிசைட் கோட்டுக்கு]] வெளியே கிடக்கின்றன. [[நியூகினியா]], [[நியுஸிலாந்து தீவுகள்]], மற்றும் [[பிலிப்பைன்ஸ்]] ஆகிய தீவுகள் இவ்வகைப்படுவன. அமைப்பு முறையில் இத்தீவுகள் பக்கத்து [[கண்டம்|கண்டங்களுடன்]] தொடர்புடையவை. உயர்ந்த தீவுகள் [[எரிமலை]]களால் உருவானவைகள். அவைகளில் நிறைய தீவுகளில் தற்போதும் இயக்க நிலை எரிமலைகள் உள்ளன. அவைகளில் [[பௌகெயின்வில்லி]], [[ஹவாய்]], [[சாலமன் தீவுகள்]] ஆகியன குறிப்பிடத்தக்கவைகள்.
"https://ta.wikipedia.org/wiki/அமைதிப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது