செவ்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100:
 
==குறுக்குச் செவ்வகங்கள்==
[[File:Crossed rectangles.png|200px|குறுக்குச் செவ்வகங்கள்]]
ஒரு செவ்வகத்தின் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளாத இரு எதிர்ப் பக்கங்களாலும் அச்செவ்வகத்தின் இரு மூலைவிட்டங்களாலும் ஆனது குறுக்குச் செவ்வகம். குறுக்குச் செவ்வகத்தின் உச்சிகளின் வரிசையமைப்பு, செவ்வகத்தின் உச்சிகளின் வரிசையாகவே இருக்கும். பொது உச்சியுடைய இரு ஒரேமாதிரியான முக்கோணங்களைக் கொண்டது போலத் தோற்றம் கொண்டிருக்கும். ஆனால் மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளி, குறுக்குச் செவ்வகத்தின் உச்சியாகாது.
 
குறுக்குச் செவ்வகம் சமகோணமுடையதல்ல. எல்லா குறுக்கு நாற்கரங்களுக்கும் உள்ளது போல, குறுக்குச் செவ்வகத்தின் நான்கு உட்கோணங்களின் கூடுதல்
(இரு குறுங்கோணங்கள், இரு பின்வளைகோணங்கள்) 720°.<ref>[http://mysite.mweb.co.za/residents/profmd/stars.pdf Stars: A Second Look]. (PDF). Retrieved 2011-11-13.</ref>
 
செவ்வகம், குறுக்குச் செவ்வகத்தின் பொதுப் பண்புகள்:
*எதிர்ப் பக்கங்கள் சம நீளமானவை.
*இரு மூலைவிட்டங்கள் சமநீளமானவை.
*இரண்டுக்கும் இரண்டு எதிரொளிப்பு அச்சுகளும் இரண்டாம் வரிசை சுழற்சி சமச்சீர்மையும் (180° கோணச் சுழற்சி) உண்டு.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது