சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 37:
1370-இன் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார்.<ref>Catherine of Siena. Available Means. Ed. Joy Ritchie and Kate Ronald. Pittsburgh, Pa.: University of Pittsburgh Press, 2001. Print.</ref> இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரியுடன்]] மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.
 
ஜூன் 1376-இல் இவர் தாமாகவே முன்வந்து [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளில்]] அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதினொன்றாம் கிரகோரியை]] மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து உரோமைக்கு 1377, ஜனவரியில் திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு திருச்சபையில் பிளவு]] ஏற்பட்டது ("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)|ஆறாம் அர்பனுக்கு]] துணை புரிய உரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.
 
புனித கத்ரீனின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்து உள்ளது. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை papa (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று அன்பாக குறிப்பிடப்படுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது