"கண. முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பர்மாவின் [[ரங்கூன்]] நகரை அடுத்த ''கம்பை'' எனும் ஊரில் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, 1945-ல் நேதாஜியின் [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தில்]] அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்த வெகு சிலரில் இவரும் ஒருவர்.
 
பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம் சிறையில் இருந்தபோது, [[ராகுல சாங்கிருத்யாயன்|இராகுல் சாங்கிருத்தியாயனின்]] ''பொதுவுடைமைதான் என்ன'' , ''வால்காவில் இருந்து[[வால்காவிலிருந்து கங்கை வரை]]'' என இரண்டு நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
 
1946-இல் தமிழ் புத்தகாலயத்தை நிறுவினார்<ref>[https://tamilputhakalayam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/ தமிழ்ப்புத்தகாலயம்]</ref>. நேதாஜியின் '''புரட்சி''' என்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார். [[மா சே துங்|மாவோ]], கார்க்கி, [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ் இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, [[பிரேம்சந்த்]] போன்ற [[இந்தி மொழி]] இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனின்]] கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர்..<ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-10/article8640153.ece கண. முத்தையா]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067576" இருந்து மீள்விக்கப்பட்டது