1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

20:51, 31 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (எசுப்பானியம்: Juegos Olímpicos de Verano de 1968), அலுவல்முறையாக XIX ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள், அக்டோபர் 1968இல் மெக்சிக்கோவின் தலைநகரம் மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

நிகழ்ச்சிகள்18 உடல் திறன் விளையாட்டுக்களில் 172 போட்டிகள்
அரங்குபல்கலைக்கழக ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Estadio Olímpico Universitario)

இலத்தீன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இதுவாகும். எசுப்பானிய மொழி பேசும் நாடொன்றில் நடத்தப்பட முதல் நிகழ்வும் இதுவேயாகும். ஓர் வளர்ந்து வரும் பொருளாதார நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக்கும் இதுவாகும். இந்தப் போட்டிகளில் வழக்கமான சாம்பல் தடகளத்திற்கு மாற்றாக அனைத்து-வானிலை (கெட்டியான) தடகளம் அமைக்கப்பட்டது.

இலையுதிர் காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக 1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும் 1964 தோக்கியோ ஒலிம்பிக்கும் அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.