ஓ. ஏ. கே. தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== நாடக வாழ்க்கை ==
இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான [[சிவாஜி கணேசன்]], [[எம். என். நம்பியார்]], [[எஸ். வி. சுப்பையா]], கவிஞர் [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கிநெருங்கிய நண்பரானார்.
 
== திரையுலகத்தில் ==
சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாகத் திரைப்படமானதும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் கருப்ப தேவர்க்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாய்ப்பு தேடி சென்னை சென்றவர் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே துணை நடிகராக இருந்தவருக்கு உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி, மீண்டும் சென்னை வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஓ._ஏ._கே._தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது