பேச்சு:ஏகபோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
ஏகபோகம் ஏன்பது ஒருவரோ, ஒரு நிறுவனமோ போட்டியின்றி சந்தையிலோ ஒரு இலாபநோக்கு முயற்சியிலோ இருப்பதுதானே. இப்படி ஒன்றியாக ஆள்வதை ''ஒன்றியாண்மை'' என்றே கூறலாம் அல்லவா? என்ன நினைக்கின்றீர்கள். தமிழில் ''தனிப்போர்'' என்றும் ஒரு சொல் உண்டு, இதன் பொருள் இலாபம் அனைத்தையும் ஒருவனே எடுத்துக்கொள்ளுதல், எல்லா விளைவுகளையும் ஒருவனே கொள்ளுதல் என்று பொருள்படும். இதிலிருந்து தனியொருவராகவோ தனியொரு நிறுவனமாகவோ இலாபம் அனைத்தையும் கொள்வதை ''தனிக்கோண்மை'' என்றும் சொல்லலாம். ஒன்றியாண்மையால் போட்டிகள் இல்லாமல் விலை ஏறிக்கொண்டே போகலாம், கொள்வோர் வேறு வழியின்றி ஒரே நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டியிருக்கும். ஆகவே ஒன்றியாண்மையைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஒன்றியாண்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் போல் தெரிகின்றது.--[[பயனர்:செல்வா|செல்வா]] 01:38, 18 மே 2010 (UTC)
:''ஒன்றியாண்மை'' நன்றாகவும் பொருத்தமாகவும் உள்ளது. ''ஏகபோகம்'' என்பது வழக்கில் ''exclusive rights'' என்ற பொருளிலேயே புழங்குவதாகத் தோன்றுகிறது. ஒன்றியாண்மை அதைக்காட்டிலும் பொருத்தமாகப் படுகிறது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:36, 18 மே 2010 (UTC)
:எவ்வகையிலும் கலைச்சொல்லாக்கம் வரவேற்க்கதக்கது. விக்கி பயனர்கள் தங்கள் புத்தாக்க முயற்சிகளை தங்களது சொந்த படைப்புகளில் மேற்கொள்ளுங்கள். பொது வழக்கில் புழங்கும் சொற்களை பயன்படுத்துவதே விக்கிப்பீடியா போன்ற மூலவளங்கள் மக்களுக்கு பயனுள்ளவையாக அமையும். மேலும் விக்கி பயனர்கள் தாங்கள் உருவாக்கும் புதிய கலைச் சொற்களை பயன்படுத்துவது விக்கி கொள்கைகளுக்கு எதிரானது. பார்க்க: [[விக்கிப்பீடியா:புத்தாக்க_ஆய்வு_கூடாது]] --[[பயனர்:Cangaran|Cangaran]] ([[பயனர் பேச்சு:Cangaran|பேச்சு]]) 13:30, 26 செப்டம்பர் 2016 (UTC)
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்|{{PAGENAME}}]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஏகபோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏகபோகம்" page.