பேரரசர் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''பேரரசன் அலெக்சாந்தர்''' அல்லது '''மகா அலெக்சாண்டர்''' (''Alexander the Great'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,<ref>[http://www.etymonline.com/index.php?search=Alexander&searchmode=none Online Etymology Dictionary]</ref> ''Megas Alexandros''; சூலை 20, கிமு 356 - சூன் 11, கிமு 323), [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]]<ref name=pomeroy1>{{cite book|author=Pomeroy, S.|coauthors=Burstein, S.; Dolan, W.; Roberts, J.|date=1998|title=Ancient Greece: A Political, Social, and Cultural History|publisher=Oxford University Press|isbn= 0-19-509742-4}}</ref><ref name=Hammond1>{{cite book|author=Hammond, N. G. L.|date=1989|title=The Macedonian State: Origins, Institutions, and History|pages=12–13|publisher=Oxford University Press|isbn= 0-19-814883-6}}</ref> பகுதியான [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மக்கெடோனின்]] பேரரசர் (கிமு 336–323). '''மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர்''' எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கர்களுக்குத்]] தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார்.
 
அலெக்சாந்தர் அவரது தந்தை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் [[அக்கீமனிட் பேரரசு|அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக்]] கைப்பற்றினார். இவர் [[அனத்தோலியாஅனதோலியா]], [[சிரியா]], [[பினீசியா]], [[காசா]], [[எகிப்து]], [[பாக்ட்ரியாபாரசீகம்]], [[பாக்திரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை நீட்டியிருந்தார்.
 
இறப்பதற்கு முன்பே, [[அரேபியக் குடாநாடு|அரேபியக் குடாநாட்டுக்குள்]] தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே [[கார்த்தேஜ்]], [[ரோம்]], [[ஐபீரியக் குடாநாடு]] ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.
 
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. [[மலேரியா]], [[நஞ்சூட்டல்]], [[தைபோய்ட்டு]]க் காய்ச்சல், [[வைரஸ்]] தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் [[ஹெலெனியக்ஹெலெனிய காலம்]] எனப்படுவதுடன், இது கிரேக்கம், [[மையக்கிழக்கு]], இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
 
== தொடக்க காலம் ==
வரிசை 131:
[[படிமம்:AlexanderCoin.jpg|thumb|left|இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள சிங்க முகம் தரித்த கிரீடம் அணிந்த அலெக்ஸாண்டர் உருவம் பதித்த வெள்ளி நாணயம்]]
 
அலெக்ஸாண்டர் டாரியஸை முதலில் மீதியாவில் இருந்தும் பின்னர் பார்தியாவில்[[பார்த்தியா]]வில் இருந்தும் விரட்டியடித்தார்.
 
அதன் பின்னர் அந்த பாரசீக மன்னன் பெஸ்சுஸ் என்கிற ராஜியத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். அவர்கள் பின்னர் தாங்கள் கொண்டு சென்று கொலைசெய்த நபர் தான் டாரியஸ் மன்னன் என்று அறிவித்தனர்.
வரிசை 139:
=== அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மாசிடோன் ===
 
ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சி பொறுப்பில் அமர்த்திவிட்டு ஆசியாவில் வெகுகாலம் அலெக்ஸாண்டர் தங்கிவிட்ட்மையால் இரண்டாம் ஃப்லிப்-ன்ஃப்லிப்பின் பழைய காவலர்கள் மாசிடோனின் ஆட்ச்கட்டிலைஆட்சிக் கட்டிலை ஆன்டிபெட்டரிடம் இருந்து பறித்தனர். அலெக்ஸாண்டர் தேபெஸ் நாட்டிலிருந்தும் வெளியேறியமையால் அங்கும் மீண்டும் கிரீஸின் ஆதிக்கம் பெற்றது.
 
மாறாக ஸ்பார்டா-வின் அரசன் மூன்றாம் அகிஸ் ஆன்டிபெட்டர்-ஐ மெகாலோபோலிஸ் போரில் வென்று கொலைசெய்தான். ஆன்டிபெட்டர் இதை ஸ்பார்டா அரசன் அலெக்ஸாண்டருக்கு அளித்த தண்டனையாக குறிப்பிட்டார். மேலும் அவ்வேளையில் ஆன்டிபெட்ட'ருக்கும் அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாஸுக்கும் இடையே மனக்கசப்பும் இருந்தது.
வரிசை 210:
 
மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், ''அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார்'' என்று குறிப்பிடுகிறார்.
 
==அலெக்சாண்டருக்குப் பின் வாரிசுரிமைப் போர்கள்==
[[File:Diadochi.png|thumb| [[தியாடோச்சி]] எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் [[செலூக்கியப் பேரரசு]], [[தாலமைக் பேரரசு]], [[சசாண்டர்]], [[ஆண்டிகோணஸ்]], [[லிசிமச்சூஸ்]] என ஐந்தாக பிளவு பட்ட [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] கிரேக்கப் பேரரசின் பகுதிகள்]]
 
{{main|தியாடோச்சி}}
 
கி மு 311இல் நடந்த [[தியாடோச்சி|முதல் வாரிசுரிமைப் போரின்]] முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான [[செலூக்கஸ் நிக்காத்தர்]] கிரேக்கப் பேரரசின் [[மேற்காசியா]] பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு [[தாலமைக் பேரரசு|தாலமி சோத்தர்]] எனும் கிரேக்கப் படைத்தலைவர் மன்னராக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார்.
 
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_அலெக்சாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது