ஆன் பொலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Anne Boleyn
வரிசை 1:
[[படிமம்:anne boleyn.jpg|300px|right]]
'''ஆன் பொலின்''', (Anne Boleyn)(1501 அல்லது 1507 – 19 மே 1536), இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை ஆட்சி புரிந்தார். இவர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி]] அரசரின் இரண்டாம் மனைவி மட்டுமல்லாமல் தனது உரிமையிலே பெம்புரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமணமும் பின்னர் இவருக்கு விதிக்கப்பட்ட [[மரண தண்டனை]]யும், இங்கிலாந்து மத சீர்திருத்தத்தின் தொடக்கமாக அமைந்த [[அரசியல்]], மதக் குழப்பங்களில் இவரை முன்னிலைப்படுத்தின.
 
[[தாமஸ் பொலின்]] மற்றும் அவரது மனைவி எலிஸபத் ஹவார்டின் மகள், இவர் ஹென்றியின் கடைசி மனைவி [[கத்தரீன் பார்|கத்தரீன் பாரைவிட]] உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் [[பிரான்ஸ்|பிரான்ஸிலும்]] [[நெதர்லாந்து|நெதர்லாந்திலும்]] கல்வி பெற்றார். 1522-ல் இவர் இங்கிலாந்துக்கு திரும்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆன்_பொலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது