சிற்றணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/w/index.php?title=Minor_(linear_algebra)&oldid=748296516-தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதத்தில்]] ஒரு [[அணி (கணிதம்)|அணியின்]] சிற்றணிக்கோவை (''minor'') என்பது அவ்வணியிலிருந்து அதன் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிரைகளையோ, நிரல்களையோ நீக்கக் கிடைக்கும் சிறிய [[சதுர அணி]]யின் [[அணிக்கோவை]]யாகும். ஒரு சதுர அணியிலிருந்து ஒரேயொரு நிரையையும், நிரலையும் மட்டும் நீக்கிப் பெறப்படும் சிற்றணிக்கோவைகள், '''முதல் சிற்றணிக்கோவைகள்''' (''first minors'') எனப்படுகின்றன. இவை அச்சதுர அணியின் அணிக்கோவை மதிப்பினைக் கணக்கிடுவதற்கும் அவ்வணியின் [[நேர்மாறு அணி]] காண்பதற்கும் பயன்படுகின்றன.
 
==வரையறை==
 
===முதல் சிற்றணிக்கோவைகள்===
''A'' ஒரு [[சதுர அணி]] எனில் அதன் ''i''-வது நிரை மற்றும் ''j''-வது நிரலிலில் உள்ள உறுப்பின் சிற்றணிக்கோவை ('''(''i'',''j'') சிற்றணிக்கோவை''' அல்லது '''முதல் சிற்றணிக்கோவை''')<ref>Burnside, William Snow & Panton, Arthur William (1886) ''[https://books.google.com/books?id=BhgPAAAAIAAJ&pg=PA239 Theory of Equations: with an Introduction to the Theory of Binary Algebraic Form]''.</ref>) என்பது ''A'' அணியின் i-ஆவது நிரையையும் j-ஆவது நிரலையும் நீக்கிவிடக் கிடைக்கும் அணியின் அணிக்கோவையாகும்.<ref>http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-Maths-TM-1.pdf கணிதவியல், மேல்நிலை முதலாமாண்டு-தமிழ்நாட்டு பாடநூல் கழகம், 2007 பதிப்பு</ref> (''i'',''j'') சிற்றணிக்கோவையின் குறியீடு M<sub>''i,j''</sub>
 
(''i'',''j'') சிற்றணிக்கோவையை <math>(-1)^{i+j}</math> ஆல் பெருக்கக் கிடைப்பது (i,j) [[இணைக்காரணி]]யாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிற்றணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது