கருப்பை வாய்ப் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 18:
'''கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்''' என்பது [[கருப்பை வாய்]] அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் [[புற்று நோய்]] ஆகும். புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும்வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும்.<ref name="Robbins" /> இந்த நோய் இருக்கையில் [[யோனி]]யில் [[குருதிப்பெருக்கு]] ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம்<ref name="Cervical Cancer, NIH"/>. நோயின் ஆரம்ப நிலையில் [[அறுவை சிகிச்சை|அறுவை சிகிச்சையும்]] முற்றிய நிலையில் இருக்கும் போது [[வேதிச்சிகிச்சை]] மற்றும் [[கதிர் மருத்துவம்|கதிரியக்க சிகிச்சையும்]] சிகிச்சைகளாகக் கொடுக்கப்படுகின்றன<ref name="American Cancer Society">{{cite web | url=http://www.cancer.org/cancer/cervicalcancer/detailedguide/cervical-cancer-treating-general-information | title=Treating cervical cancer | publisher=American Cancer Society, Inc | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
[[மனித சடைப்புத்துத் தீ நுண்மம்]] (HPV - Human Papilloma Virus) இன் [[நோய்த்தொற்று]] 90% மான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாவதற்கும்உருவாவதற்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது.<ref name=Robbins>{{cite book|vauthors=Kumar V, Abbas AK, Fausto N, Mitchell RN | year = 2007 | title = Robbins Basic Pathology| edition = 8th | publisher = Saunders Elsevier| pages=718–721 | isbn= 978-1-4160-2973-1}}</ref><ref>{{cite book|first1=Donald| last1=Kufe|title=Holland-Frei cancer medicine.|date=2009|publisher=McGraw-Hill Medical|location=New York|isbn=9781607950141|page=1299|edition=8th|url=https://books.google.com/books?id=R0FbhLsWHBEC&pg=PA1299}}</ref>. ஆனாலும் மனித சடைப்புத்துத் தீ நுண்மம் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் பலருக்கு அதனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதில்லை<ref name=WCR2014/><ref>{{cite journal|last1=Dunne|first1=EF|last2=Park|first2=IU|title=HPV and HPV-associated diseases.|journal=Infectious Disease Clinics of North America|date=Dec 2013|volume=27|issue=4|pages=765–78|pmid=24275269|doi=10.1016/j.idc.2013.09.001}}</ref>. [[புகைத்தல்]], பலம் குன்றிய [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]], [[குடும்பக் கட்டுப்பாடு|குடும்பக் கட்டுப்பாட்டு]] குளிகைகள், மிக இளம் வயதில் [[உடலுறவு|உடலுறவில்]] ஈடுபடல், பலருடன் உடலுறவு கொள்ளல் போன்ற வேறு காரணிகளும் குறைந்தளவு முக்கியம் பெற்ற சூழிடர் காரணிகளாக இருக்கின்றன<ref name=NCI2014Pro/>.
 
[[திறத் தணிக்கைச் சோதனைகள்]] (அதாவது, தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனைகள் - Screening tests) மூலம் புற்றுநோய் உருவாவதற்கான கூறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம்<ref name="Cervical Cancer, NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/patient/cervical-treatment-pdq#section/all | title=Cervical Cancer Treatment (PDQ®)–Patient Version | publisher=NIH, National Cancer Institute | date=July 14, 2016 | accessdate=திசம்பர் 27, 2016}}</ref>. [[பாப் சோதனை]] (PAP test) மற்றும் [[மனித சடைப்புத்துத் தீ நுண்ம சோதனை]] (HPV test) என்பன பல நாடுகளில் திறத் தணிக்கைச் சோதனைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன<ref name="NIH">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/pap-hpv-testing-fact-sheet | title=Pap and HPV Testing | publisher=National Cancer Institute | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>. [[பாப் சோதனை]] மூலம் புற்று நோயாக மாற வாய்ப்புள்ள [[இழையம்|இழையங்களைக்]] கண்டறிவதுடன், மனித சடைப்புத்துத் தீ நுண்ம சோதனை மூலம் மனித சடைப்புத்துத் தீ நுண்ம நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியலாம்<ref name="NIH"/>. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், புற்றுநோய் உருவாவதை அறுவைச் சிகிச்சை ([[உயிரகச்செதுக்கு]] மற்றும் LEEP - Loop Electrosurgical Excission Procedure முறை), குளிர் சிகிச்சை (Cryotherapy, சீரொளிச் சிகிச்சை (Laser Therapy) போன்ற சில சிகிச்சைகள் மூலம் தடுக்கலாம்<ref name="NIH"/>. கர்ப்பப்பை வாய் திறத் தணிக்கைச் சோதனைத் திட்டங்களின் பரவலான பயன்பாட்டினால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் நிகழ்வு 80% இற்கும் மேலாகக் குறைந்தது அவதானிக்கப்பட்டுள்ளது<ref name="NIH1">{{cite web | url=https://www.cancer.gov/types/cervical/hp/cervical-screening-pdq | title=Cervical Cancer Screening (PDQ®)–Health Professional Version | publisher=National Cancer Institute | date=March 4th, 2016 | accessdate=திசம்பர் 30, 2016}}</ref>.
 
மனித சடைப்புத்துத் தீ நுண்மத்திற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது<ref name="WHO">{{cite web | url=http://www.who.int/bulletin/volumes/85/9/06-038414/en/ | title=Human papillomavirus and HPV vaccines: a review | publisher=World Health Organization | accessdate=திசம்பர் 30, 2016 | author=FT Cutts a, S Franceschi b, S Goldie c, X Castellsague d, S de Sanjose d, G Garnett e, WJ Edmunds f, P Claeys g, KL Goldenthal h, DM Harper i, L Markowitz | pages=649-732 | Type=Bulletin | Volume=85 | Issue=9 | Date=September 2007}}</ref>. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் சுமார் 70% க்குக் காரணமாக இருக்கும் மனித சடைப்புத்துத் தீ நுண்மத்தின் அதிக ஆபத்து வகைகளான இரு வகைகளுக்கு (வகை 16 உம் வகை 18 உம்) எதிரானதாக இந்த தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றன <ref name="pmid16670757">{{cite journal | author = Lowy DR, Schiller JT | title = Prophylactic human papillomavirus vaccines. | journal = J. Clin. Invest. | volume = 116 | issue = 5 | pages = 1167–73 | year = 2006 | pmid = 16670757 | doi = 10.1172/JCI28607 | url = http://www.jci.org/articles/view/JCI28607| accessdate = 2007-12-01 }}</ref>. இந்தத் தடுப்பு மருந்து எல்லா வகை மனித சடைப்புத்துத் தீ நுண்மத்திற்கும் எதிரானதாக இல்லாமல் இருப்பதாலும், வேறு காரணிகளாலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வரக்கூடும் என்பதாலும், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகும் பெண்கள் தொடர்ந்து திறத் தணிக்கைச் சோதனைக்குச் செல்வது நல்லது<ref name="National Cancer Institute HPV Q&A">{{cite web| url=http://www.cancer.gov/cancertopics/factsheet/risk/HPV-vaccine| title=Human Papillomavirus (HPV) Vaccines: Q & A - National Cancer Institute|accessdate=2008-07-18}}</ref>
 
உலகளாவிய அளவில், கருப்பை வாய்ப் புற்று நோயானது நான்காவது பெரியளவில் ஏற்படும் புற்றுநோயாகவும், பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் நான்காவது அதிகளவிலான இறப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாகவும் இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பு ஒர் அறிக்கையில் கூறியுள்ளது<ref name=WCR2014>{{cite book|title=World Cancer Report 2014|date=2014|publisher=World Health Organization|isbn=9283204298|pages=Chapter 5.12}}</ref>. 2012 ஆம் ஆண்டில், 528,000 கருப்பை வாய்ப் புற்றுநோயாளர்கள் இருந்ததாகவும், அதில் 266,000 பேர் இறந்ததாகவும் அவ்வறிக்கை கூறியுள்ளது<ref name=WCR2014/>. இது மொத்த புற்றுநோய் நிகழ்வில் 8% மாக இருப்பதுடன், புற்றுநோயால் ஏற்படும் இறப்பில் 8% மாகவும் இருக்கிறது<ref name=WCR2014Total>{{cite book|title=World Cancer Report 2014|date=2014|publisher=World Health Organization|isbn=9283204298|pages=Chapter 1.1}}</ref>.
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/கருப்பை_வாய்ப்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது