"கைபர் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

507 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கைபர் போர்''' (''Battle of Khaybar'') [[முகம்மது நபி]]யின் வாழ்க்கையில் இடம்பெற்ற போர் ஆகும். இது 628 மே மாதம் அரேபிய பாலைவனத்தின் [[மதீனா]] நகருக்கு 150 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள [[கைபர்]] என்னும் பகுதியில் (இன்றைய [[அராபியத் தீபகற்பம்|அராபியா]]வின் வடமேற்கே) நடந்த போர் ஆகும். இப்போர் முகம்மது நபியின் தலைமையிலான மதினா [[முசுலிம்]]களுக்கும், [[கைபர்]] பகுதி [[யூதர்]]களுக்கும் இடையில் நடைபெற்றது.<ref name="Britannica">{{cite encyclopedia | title=Ali | encyclopedia=Encyclopædia Britannica Online | accessdate=2007-10-12}}</ref>
==போருக்கான காரணங்கள் ==
கைபர் பகுதியில் வாழ்ந்த பனூ நாதிர் [[யூதர்]]கள் பனூ வாடி, பனூ குரா, பனூ தைமா மற்றும் பனூ கபதான் போன்ற அரேபிய பழங்குடி குலங்களுடன் சேர்ந்து [[மதீனா]] நகரை தாக்க திட்டமிட்டனர். [[யூதர்]]களின் திட்டத்தை அறிந்த மதீனா நகர [[முசுலிம்]]களின் படை கைபர் நகர யூதர்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் இணையும் முன்பே கைபர் நகரை முற்றுகையிட்டது.<ref>Islamic Historical Novel: Perang Khaibar (Khaybar War) by Abdul Latip Talib, 2011 (Malaysia)</ref>
 
சுகாட்லாந்து வரலாற்றாசிரியர் வில்லியம் மான்கோமரி வாட் கூற்றுப் படி மதினாவில் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அண்டை அரபு பழங்குடியினர் மத்தியில் குரோதங்களை தூண்டிவிட்டுக்கொண்டிருந்த பனூ நாதிர் என்ற அரபு குல கூட்டமும் போர் நடைபெற்ற கைபர் பகுதியில் யூதர்களுடன் இருந்தனர்.
[[முகம்மது நபி]]யுடன் ஒப்பந்தம் இருந்த காரணத்தினால் பனூ அமீர் பழங்குடியினர் கைபர் யூதர்களுடன் ஒன்று சேர மறுத்தனர்.<ref name ="trenchLing">Lings, ''Muhammad: his life based on the earliest sources'', p. 215-6.</ref>
===பனூ குரைசா===
போர் தொடங்கிய பின்னர் கைபர் பகுதி பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயாய்ஹுயை இப்னு அக்தாப் பனூ குரைசா பழங்குடியினரின் ஆதரவை கேட்டார்.<ref>Peterson, ''Muhammad: the prophet of God'', p. 127.</ref>
 
போரில் பனூ குரைசா படை தோல்வி அடைந்து சரணடைந்தபின் பனூ குரைசா படை வீரராலேயே பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயாய்ஹுயை இப்னு அக்தாப் கொல்லப்பட்டார். அதன் பின் அபு ராபி ஹுகைக் பனூ நாதிர் யூதர்களின் தலைவராக பொறுப்பேற்றார்.<ref name="Nomani 1979, vol. II, pg. 156">Nomani (1979), vol. II, pg. 156</ref><ref>Urwa, ''Fath al-Bari'', Vol. VII, pg. 363</ref> பின்னர் ஹுகைக், உசைர் என்பவரால் வெற்றிகொள்ளப்ப்ட்டார்.<ref>Zurqani, Ala al-Mawahib, Vol. II, p.196, Egypt</ref>
 
==கைபர் போர்க்களம்==
 
==போரின் முடிவு==
[[முகம்மது நபி]] யூதத் தலைவர்களான இப்னு அபித ஹுக்கய்க்ஹுகைக், கலீபா மற்றும் வாலித் போன்றவர்களை சரணடைய நிபந்தனைகளைப் பேசினார்.<ref name="ReferenceA">Watt 1956), pg. 218</ref>
கைபர் யூதர்கள் இறுதியாக தமது உற்பத்திப் பொருட்களில் அரை பங்கு [[முசுலிம்]]களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சரணடைந்தனர். பின் அங்கேயே வாழ அனுமதிக்கப்பட்டனர்.<ref name="ReferenceA"/>
 
பனூ நாதிர் யூதர்களின் தலைவர் ஹுயை இப்னு அக்தாப் மகளான விதவைப்பெண் [[சஃபியா பின்த் ஹுயை|சபியாவை]]வை இசுலாமிய இறைத்தூதர் [[முகம்மது நபி]] திருமணம் செய்து கொண்டார்கள். <ref name="Haykal 2008, p. 400">Haykal (2008), p. 400</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2179542" இருந்து மீள்விக்கப்பட்டது