"எர்பியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வரலாறு: clean up, replaced: OO using AWB
சி (→‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB)
சி (→‎வரலாறு: clean up, replaced: OO using AWB)
* கனசதுர (கட்டக) [[சிர்க்கோனியா]]வால் செய்யப்படும் நகைகளில் அதிக செலவில்லாமல் அழகு நிறமூட்ட எர்பியம் பயன்படுகின்றது.
== வரலாறு ==
1843 ஆம் ஆண்டில் கார்ல் குச்ட்டாவ் மோசாண்டர் (Carl Gustaf Mosander) என்பவர் கடோலினைட்டு என்னும் கனிமத்தில் இருந்து இயிற்றியா ("yttria") என்னும் எர்பிய ஆக்ஸைடுப் பொருளை பிரித்தெடுத்தார். அதனை அவர் அப்பொழுது “டெர்பியா” என்று அழைத்தார். மோசாண்டர் கடோலினைட்டில் இருந்து மூன்று பிரிவுப்பொருட்கலை எடுத்தார்: அவை இயிற்றியா, எர்பியா, டெர்பியா என்பன ஆகும். [[சுவீடன்]] நாட்டில் இயிட்டெர்பி (Ytterby)என்னும் ஊரில் அதிகம் கிடைத்ததால், எர்பியம் என்று பெயரிட்டார் (இயிட்டெர்பி என்பதின் மருவிய பெயராக அது கருதப்பட்டது). தொடக்க காலத்தில் (1843-1877 காலப்பகுதியில்) அவர் பிரித்தெடுத்த மூன்று பொருட்களுக்கும் இடையே நிறைய பெயர்க்குழப்பங்கள் இருந்தன. 1905 ஆம் ஆண்டு ஜியார்ஜெஸ் அர்பெய்ன் என்பவரும் சார்லஸ் ஜேம்ஸ் என்பவரும் புறத்தொடர்பின்றி பெரும்பாலும் தூய எர்பிய ஆக்ஸைடை (Er<sub>2</sub>[[oxygenஆக்சிசன்|O]]<sub>3</sub>) பிரித்தெடுத்தனர். 1934 ஆம் ஆண்டுப் பகுதியில் தான் பொட்டாசிய ஆவியைக் கொண்டு நீரற்ற எர்பியக் குளோரைடில் (anhydrous chloride) இருந்து தூய எர்பியத்தைப் பிரித்தெடுத்தனர்.
== கிடப்பும் மலிவும் ==
எர்பியம் இயர்கையில் அரிதாகவே கிடைக்கின்றது. ஆனால் மோனாசைட்டு (monazite) கனிமமணலில் இருந்து இது பெறப்படுகின்றது. எர்பியம் செனோட்டைம் (xenotime) யூக்ஸனைட்டு (euxenite) என்னும் கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. அணுப்பிளவின் சிதை பொருட்களில் இருந்தும் கிடைக்கின்றது. பொதுவாக எர்பியத்தைக் கனிமப்பொருட்கலில் இருந்து பிரித்தெடுப்பது மிகவும் கடினம் (அதிக செலவாகும் பிரிப்பு முறைகள்). 20 ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு [[மின்மவணு-மாற்றிகள்]] ([ion-exchange) துணைகொண்டு பிரித்தெடுப்பது வழக்கம். செனோட்டைம் (xenotime) யூக்ஸனைட்டு (euxenite) போன்ற கனிமங்களில் இயிற்றியம் (yttrium) என்னும் தனிமம் மூன்றில் இரண்டு பங்கும், எர்பியம் இருக்கும் எர்பியா என்னும் பொருள் 4-5% விழுக்காடே இருக்கும். நில உருண்டையின் புற ஓட்டில் மில்லியன் பகுதியில் 3.5 பங்கு உள்ளது <ref name="ReferenceA">J. Emsley, The Elements, Clarendon Press, Oxford, 1989</ref>. கடல் நீரில் மில்லியன் பகுதியில் 2x10 <sup>−7</sup> பகுதி கொண்டது.<ref name="ReferenceA"/>.
53,360

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2189949" இருந்து மீள்விக்கப்பட்டது