நரம்புத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
→‎top: மேற்கோள் (edited with ProveIt)
வரிசை 19:
}}
 
'''நரம்புத் தொகுதி''' (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது விலங்குகளில் காணப்படும், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், விலங்கிற்கு உள்ளேயும், வெளியிலான சூழலுடன் தொடர்புற்றும் தகவல்களையும், சைகைகளையும் விலங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் கடத்துவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். இது நரம்பு உயிரணுக்கள் (nerve cells) எனப்படும் [[உயிரணு]]க்களினாலும், அவற்றையெல்லாம் இணைக்கும் [[நரம்பு]]களாலும் (nerves) ஏற்படுத்தப்பட்ட ஒரு [[வலையமைப்பு]] ஆகும். இத் தொகுதியே [[உயிரினம்|உயிரினங்களின்]] உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கட்டுப்படுத்துவதாகவும், உடலின் பல பகுதிகளிலும் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை கடத்துவதாகவும் இருக்கின்றது.<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMHT0025454/ | title=Nervous System | publisher=PubMed Health | work=U.S. National Library of Medicine | accessdate=ஏப்ரல் 10, 2017}}</ref>

இந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நரம்புத் தொகுதியானது இரு வகையான உயிரணுக்களைக் கொண்டன. அவையாவன [[நியூரோன்கள்]] (Neurons) என அழைக்கப்படும் [[நரம்பணு]]க்களும் மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிப்பதுமான சிறப்புக் கலங்களான [[நரம்புக்கட்டி]]களும் (glia) ஆகும். நரம்பணுக்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் [[நரம்புக்கலத்திரள்]] (ganglia) என அழைக்கப்படும்.
 
நரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, [[மைய நரம்பு மண்டலம்]], [[புற நரம்பு மண்டலம்]], என்பனவாகும். நரம்புக் கலங்கள் இவ்விரு தொகுதிகளுக்கும் இடையேயும், அவற்றின் உள்ளேயும் [[கணத் தாக்கம்|கணத் தாக்கங்களை]] உருவாக்கிச் செயற்படுத்துகின்றன. [[மூளை]], [[முள்ளந்தண்டு வடம்|முண்ணாண்]] (spinal cord), என்பன [[முதுகெலும்பி]]களின் மைய நரம்பு மண்டலத்தின் பகுதிகள். [[முதுகெலும்பிலி]]கள், [[முதுகுநாணி]]களில் காணப்படும் [[நரம்பு நாண்]] (nerve cord) என்பது, முதுகெலும்பிகளின் மையநரம்புத் தொகுதிக்கு ஒப்பான பகுதியாகும். புற நரம்பு மண்டலமானது உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை மையநரம்புத் தொகுதியுடன் இணைக்கும் நரம்புக் கலங்களையும் கொண்டது. தூண்டல்களுக்கு மறுவினையாக உணர் நரம்புக் கலங்கள், சமிக்ஞைகளை உருவாக்கி, மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது. மைய நரம்பு மண்டலமானது இச் சமிக்ஞகளின் மீது தொழிற்பட்டு உரிய சமிக்ஞைகளைத் [[தசைநார்]]களுக்கும், [[சுரப்பி]]களுக்கும் அனுப்புகின்றது. விலங்குகளில் காணப்படும் நரம்புத் தொகுதியின் நரம்புக் கலங்கள், சிக்கலான ஒழுங்கமைப்பில் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன. இவை [[மின்வேதிச் சமிக்ஞை]]களையும், [[உணர்வுக் கடத்திக் கலம்|உணர்வுக் கடத்திக் கலங்களையும்]] பயன்படுத்திக் கணத்தாக்குகளை ஒரு நரம்புக்கலத்திலிருந்து அடுத்த நரம்புக் கலத்துக்குக் கடத்துகின்றன. வேறுவேறான நரம்புக் கலங்களுக்கு இடையிலான இடைவினைகள், [[நரம்புச் சுற்று]]க்களை உருவாக்கி, உயிரினத்தின் உலகம் பற்றிய நோக்கையும், அதன் உடலுக்குள்ளேயே நடை பெறுவனவற்றையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம், அவ்வுயிரினத்தின் நடத்தைகளையும் முறைப்படுத்துகின்றது. பல பல்கல உயிரினங்களில் நரம்புத் தொகுதிகள் காணப்பட்டாலும், அவை சிக்கல்தன்மையில் பெரும் வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நரம்புத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது