தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்ததாகவும்<ref>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1083 | title=ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்? | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref>, சங்க இலக்கியங்களில் தையே புத்தாண்டு என்ற குறிப்பு இருப்பதாகவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர். எனினும், தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லை.<ref>{{cite web | url=http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/ | title=தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று! | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> இன்னும் 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லை.<ref>{{cite web | url=http://maalan.co.in/?p=661 | title=ஆண்டும் ஆள்வோரும் | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> மேலும், 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல் கொண்டாடினார் என்பதே உண்மையாகும்.<ref name="tamilhindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | publisher=தமிழ்ஹிந்து | date=23 பெப்ரவரி 2013 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=பால.கௌதமன்}}</ref> இக்காரணங்களை தீவிர சனாதன மதப் பற்றாளர்கள் முன் வைத்து தைத் திருநாள் புத்தாண்டை எதிர்க்கிறார்கள்.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref>
 
சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்குக் கூறப்படும் புராணக் கதையிலுள்ள ஆபாசமும், அந்த ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர்கள் இருப்பதும் சனாதனவாதிகளால் விளக்க முடியாததாகவே உள்ளது. இந்த வடமொழிப் பெயர்களை இப்போது தமிழ்ப் படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெயர்கள் முன்பு வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும்இலக்கியத் தரவும் முன் வைக்கப்படவில்லை. சாலிவாகன ஆண்டுக்கணக்குகளை தமிழ் மேல் திணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கும் விடையில்லை. தமிழர்களில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற காரணத்தினால் சித்திரைப் பிறப்பை தமிழ்ப்புத்தாண்டு என்று சனாதனவாதிகள் முன்னிறுத்துகிறார்கள். வடமொழித் திணிப்பாகவும் சனாதன முன்னிறுத்தலாகவுமே இது தமிழறிஞர்களால் பார்க்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது