மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 88:
[[படிமம்:மீசாலை புகையிரத நிலையம்.jpg|alt=மீசாலை புகையிரத நிலையம்|thumb|மீசாலை புகையிரத நிலையம்]]
 
ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இசைவமும்இனிய தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, பனை, தென்னை, வேம்பு, தேக்கு, நாவல், மஞ்சலுண்ணா, போன்றவை பயன்தரு மரங்களாக உள்ளது. இதில் மாமரத்தின் இனங்களாக கறுத்தைக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, செம்பாட்டான், விலாட்டு, பாண்டி, சேலம், கழைகட்டி, பச்சைத்தின்னி, வாழைக்காய்ச்சி, நாட்டான் என பல வகைப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இந்த வகையில் இக்கிராமம் மாசாலை எனவும் அது மருவி பின் மீசாலை என வந்ததாகவும் கூறுகின்றார்கள். மீசாலை மாம்பழமானது தரத்தாலும்இ சுவையாலும் பெயர் பெற்று விளங்குகிறது.அதில் கறுத்தைக்கொழும்பான் மாம்பழமானது மிகச் சுவையானதும் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. அதே சமயம் மாம்பழங்களானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்சுவையைப் பெற்றதாக அமைந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மாம்பழமானது நன்றாக முற்றியதாகவும் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகவும் கனிந்து பழுத்த மாம்பழமானது ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காததாகவும் அமைந்துள்ளது. இந்த மாம்பழங்களை நாம் பறிக்கும் போது நிலத்தில் வீழ்ந்து காயம் ஏற்பட்டு பழுதுகள் ஏற்படாது இருக்க அத்தாங்கு என்று அழைக்கப்படும் உபகரணத்தைப் பாவிக்கப்படுகின்றது.இது ஒரு நீளமான தடியின் ஒரு பக்கத்தில் ஓர் கூடை  அல்லது பை இணைக்கப்பட்டு  மாம்பழத்தை மரத்தில் இருந்து பறிக்கும் போது கூடைக்குள் அல்லது பையிற்குள் விழக்கூடியதாகவும் நிலத்தில் விழாததாகவும் அமைந்திருக்கும். இது மாமரத்திற்கும் எல்லோரது பாவணையிலும் இருக்கும். மாம்பழத்தை நாம் தோலைச்சீவி வெட்டிச்சாப்பிடுவது வழக்கம். இருந்தும் இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தை ஒருசிலர் தோல் சீவாது முழுமையாக எடுத்து ஒரு பக்கத்தில் கடித்து சிறுதுவாரத்தை ஏற்படுத்தி சூப்பிச்சாப்பிடுவதுவழக்கம். இது ஓர் தனிச்சுவையாக இருக்கும்.  இதை மாங்கொட்டை சூப்பிகள் என சிறப்பாகவும் செல்லமாகவும் அழைப்பார்கள்.
 
எமது கிராமமானது மணல் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தப்பிரதேசத்தில் உற்பத்திசெய்யப்பட்ட மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் என்பனவற்றின் சுவையானது தனிச்சிறப்பைக்  கொண்ட சிறப்பைப் பெற்றுள்ளது. மீசாலை மாம்பழம் பலாப்பழமானது எந்தப்பகுதியிலும் விட்டுக்கொடுக்காத தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த மண்ணும், மண்ணில் வசிப்பவர்களும் எல்லோருடனும் அன்பு கொண்டவர்களாகவும், வந்தோரை வரவேற்று அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டதாகவும் உள்ள மகிமையைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது