மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
==தமிழ்ப்பணி==
திருச்சி தூய வளவனார் கல்லூரியில் பயிலும்போது [[தேவநேயப் பாவாணர்]] எழுதிய ஒப்பியன் மொழிநூல் என்னும் புத்தகத்தைப் படித்துத் தனித்தமிழ் ஆர்வம் பெற்றார். 1958 இல் பாவாணரின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டதால் சாத்தையா என்னும் தனது இயற்பெயரை தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். [[இரா. இளவரசு]] போன்ற பிற மாணவத் தோழர்களுடன் இணைந்து தமிழ்ப் பேராயம் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். [[பெருஞ்சித்திரனார்]] நடத்திய தென்மொழி இதழில் துணை ஆசிரியராகவும் [[கைகாட்டி]], அறிவு ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். பாவாணர் தலைமையில் இயங்கிய [[உலகத் தமிழ்க் கழகம்]] என்னும் அமைப்பிலும்,அதன் பின்னர் [[இரா. இளவரசு]] முதலியரோடு இணைந்து [[தமிழியக்கம்]] என்னும் அமைப்பிலும் முன்னின்று செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்வழிக் கல்வி, கோவில்களில் தமிழ் வழிபாடு, விளம்பரப் பலகைகளில் தமிழ் எனப் பல வழிகளில் பணியாற்றினார்.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மு._தமிழ்க்குடிமகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது