கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''கணம்''' அல்லது '''தொடை''' (''set'') என்பது பல்வேறு பொருட்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய [[கருத்து|கருத்தாகத்]] தோன்றினாலும், கணிதத்தின் ஓர் ஆழம் உடைய அடிப்படைக் [[கருத்துரு]]க்களில் ஒன்றாக இது விளங்குகிறது. '''கணம்''' அல்லது '''தொடை''' என்பதில் உள்ள பொருட்களை ''உறுப்புகள்'' என்பர். எடுத்துக்காட்டாக 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்ட கணங்களும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்கு [[கணக் கோட்பாடு]] என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது.
 
[[கணக் கோட்பாடு]], 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இது தொடக்க வகுப்புக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, கணிதக் கல்வியில் எங்கும் காணப்படும் ஒரு பகுதியாக ஆகியுள்ளது. தற்காலக் கணிதக் கல்விக்குப் பயன்படும் அடிப்படைக் கணித மொழிகளில் இது முக்கியமானவற்றுள் ஒன்றாகும்.
 
== வரைவிலக்கணம் ==
 
'''கணம்''' அல்லது '''தொடை''' என்பது '''நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் ஒரு தொகுப்பு''' ஆகும். கணமொன்றிலுள்ள பொருட்கள் '''உறுப்புகள்''' (elements) எனப்படுகின்றன. கணமொன்றின் உறுப்புகள், எண்கள், மக்கள், எழுத்துக்கள், வேறு கணங்கள் என எதுவாகவும் இருக்கலாம். கணங்களை ''A'', ''B'', ''C'', முதலிய ஆங்கில அகர வரிசையின் பெரிய (தலைப்பு) எழுத்துக்களினால் குறிப்பது மரபு. ''A'' யும் ''B'' யும் ஆகிய இரண்டு கணங்களும் ஒரே உறுப்புக்களைக் கொண்டிருப்பின், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று ஈடாகும் (சமனாகும்). அதாவது ''A'' யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் '' B'' யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஈடு (=சமம்) எனின் ''A'' = ''B'' எனக் குறிக்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது