இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். [http://www.internetworldstats.com/stats.htm Internet World Stats]
 
===இணையத்தின் வளர்ச்சி===
 
1971-இல் ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்ட கணுக்கள் (Nodes) என்னும் பிணைய மையங்களின் எண்ணிக்கையானது பதினைந்தாக அதிகரித்தது.பின் அது 1972-இல் முப்பது கணுக்களாக வளர்ச்சி பெற்றது. ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெற முடியும் என்பது செயற்படுத்திக் காட்டப்பட்டது.
 
அதன்பிறகு,அரசின் வெவ்வேறு துறைகள், பல்கலைக் கழகங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் தங்கள் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன.
 
அடுத்ததாக, அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த கணினிகளையும் கணினிப் பிணையங்களையும் அமைத்துச் செயல்பட்டு வந்த சமூகக் குழுக்கள் பல தத்தம் பிணையங்களை ஆர்ப்பாநெட்டுடன் இணைத்துக் கொண்டன.இதன் விளைவாக, ஆர்ப்பாநெட்டின் இராணுவத் தன்மை குறையத் தொடங்கியது.
 
1983-இல் ஆர்ப்பாநெட்டிலிருந்து அமெரிக்க இராணுவப் பிணையம் ‘மில்நெட்’ (Milnet) என்ற பெயரில் தனியாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட ஆரம்பித்தது.அதற்குப்பின்,ஆர்ப்பாநெட் பொதுப் பிணையமாகியது.
 
அறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) என்எஸ்எஃப்நெட் (NSFNet) என்னும் பிணையத்தைத் தோற்றுவித்தது.இதில் ஐந்து மீத்திறன் கணினி மையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தகவல் மூலாதாரங்களை அமெரிக்காவிலுள்ள எந்தவொரு கல்வி நிறுவனமும், ஆய்வுக் கூடமும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
 
இது 1984-இல் ஆர்ப்பாநெட்டைப் போன்றே நாடு முழுவதும் அளாவத்தக்க வகையில் தம் சொந்தப் பிணையக் கட்டமைப்பை நிறுவியது. ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்ட கணினி மையங்கள் அருகிலுள்ள என்எஸ்எஃப்நெட்டின் மீத்திறன் கணினி மையத்துடன் இணைக்கப்பட்டன.
 
1988-ஆம் ஆண்டில் என்எஸ்எஃப்நெட் புதுப்பிக்கப்பட்டது.அது மேலும் மேலும் வளர்ச்சிபெறவே,ஆர்ப்பாநெட் தம் முக்கியத்துவத்தை இழந்தது.ஆர்ப்பாநெட்டில் இணைக்கப்பட்டிருந்த பல கணினிப் பிணையங்கள் என்எஸ்எஃப்நெட்டுடன் இணைந்தன.இதனால்,1990-இல் ஆர்ப்பாநெட் மறைந்தது.என்எஸ்எஃப்நெட் புதிய இணையமாகச் செயல்படத் தொடங்கியது.
 
அரசுத் துறையினர்,அரசு சார்ந்த நிறுவனங்கள்,அறிவியல் ஆய்வுக்கூடங்கள் முதலானவை தம் சொந்த பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தி வந்த பிணையத்தைப் பிற்காலத்தில் பொதுமக்களும் பயன்படுத்திட என்எஸ்எஃப்நெட் வழிவகுத்தது.
 
===இணையம் வரையறை===
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது