வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
== வேதிச்சமநிலை==
வேதி வினைவேகவியலானது வேதிவினைகளின் வேகத்தைப் பற்றி அறிய முற்படும் போது வெப்ப இயக்கவியலோ, ஒரு வேதி வினை நிகழத் தேவையான சாதக, பாதகங்களைப் பற்றி அறிய முற்படுகிறது. ஒரு மீள் வினையில், முன்னோக்கு வினை மற்றும் பின்னோக்கு வினையின் வேகங்கள் சமநிலையை அடையும் போது வேதிச்சமநிலையானது எட்டப்படுகிறது. வேதிச்சமநிலை அடைந்த பிறகு வினைவிளைபொருட்கள் மற்றும் வினைபடுபொருட்களின் செறிவுகளில் எந்த வித மாற்றமும் ஏற்படுவதில்லை. இதற்கு உதாரணமாக, ஹேபா் முறையில் நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா தயாரிக்கும் முறையினைக் கூறலாம்.
 
==கிப்ஸின் கட்டிலா ஆற்றல் (G) ==
பொதுவாக, வெப்ப இயக்கவியலின்படி கட்டிலா ஆற்றல் மற்றும் கட்டிலா ஆற்றல் மாற்றம் என்பது ஒரு வேதி வினையானது நிகழுமா? என்பதைப் பற்றிய முடிவைத் தருவது ஆகும். ஆனால், வேதி வினைவேகவியலோ, ஒரு வேதி வினை எவ்வளவு வேகத்தில் நிகழும் என்பதைக் காண முற்படுவது ஆகும். ஒரு வினையானது தன்னிச்சையாக நிகழுமா என்பதை முடிவு செய்ய அமைப்பை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய ஓா் வெப்ப இயக்கவியல் சார்பு தேவைப்பட்டது. வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி இந்த சார்பை அறிமுகப்படுத்தியது. இந்த சார்பானது அமைப்பின் என்தால்பி, வெப்பநிலை மற்றும் என்ட்ரோபி ஆகியவற்றைச் சார்ந்தது.
ஒரு செயல்முறையின் கட்டிலா ஆற்றல் மாற்றத்திலிருந்து (∆G) ஒரு வினை நிகழுமா என்பதற்கும், வெப்ப இயக்கவியல் தன்னிச்சை செயல்முறைக்குமான காரணங்கள் பின்வருமாறு:
அமைப்பின் மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில்,
∆G > 0, ∆G = நேர்மறை மதிப்பு, செயல்முறையானது தன்னிச்சை செயல்முறை அல்ல மற்றும் நிகழாது.
∆G = 0 சமநிலை வினை
∆G<0, ∆G= எதிர்மறை மதிப்பு, செயல்முறையானது தன்னிச்சையானது மற்றும் நிகழக்கூடியது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது