ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
பல்வேறு வகையைன வண்ணப்பூச்சுகள் ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வண்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பதற்கு அதன் பாகுத்தன்மை, கரைதிறன், வண்ணப்பூசின் இயல்புகள் போன்றவற்றுடன் உலரும் நேரம் ஆகிய கூறுகள் கணக்கிடப்படுகின்றன.
 
===எண்ணெய் ஓவியம் (''Oil painting'')===
* [[நெய்யோவியம்]] (Oil)
mage:Mona Lisa, by Leonardo da Vinci, from C2RMF retouched.jpg|thumb|''[[மோனா லிசா ]]'', [[லியொனார்டோ டா வின்சி]], ''ஏ. 1503–06'']]
 
எண்ணெய் ஓவியம் என்பது [[நிறமி]]களைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதை எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் ஆரம்பகால நவீன ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் ஆகும். இவ்வகை எண்ணெய்களை தேவதாரு (pine) மரத்தின் பிசின்கள் (resins) அல்லது அதிலிருந்து பெறப்படும் சாம்பிராணி ( frankincense) குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து ''நெய்வனங்கள்'' (varnishes) தயாரிக்கப்படுகின்றன. அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் பயன்படும் பொருளாகும். பயன்படுத்தப்படும் எண்ணெய்யை பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.
 
முதன்முதலில் எண்ணெய் ஓவியம் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். <ref>{{cite web|last=Barry|first=Carolyn|title=Earliest Oil Paintings Found in Famed Afghan Caves|url=http://news.nationalgeographic.com/news/2008/02/080205-afghan-paintings_2.html|publisher=National Geographic Society|accessdate=7 January 2013}}</ref>. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை எண்ணெய் ஓவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.
 
===வண்ணக்கோல் (pastel)===
[[படிமம்:Pastelkrijt.jpg|200px|thumb|இடது|வண்ணக்கோல்]]
வண்ணக்கோல் என்பது வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகமாகும்.
எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களையும் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.வண்ணக்கோல் பூச்சுகளின் விளைவு வேறு எந்தவொரு ஓவிய செயல்முறையையும் விட இயற்கையான உலர்ந்த நிறமிகளுடன் நெருக்கமாக ஒத்து இருக்கிறது<ref>Mayer, Ralph. The Artist's Handbook of Materials and Techniques. Viking Adult; 5th revised and updated edition, 1991. ISBN 0-670-83701-6</ref>.
 
 
* [[நீர்வர்ணம்]] (Watercolor)
* [[சுதை ஓவியம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது