விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 420:
{{ping|George46}}, இது தொடர்பாக உங்கள் கருத்து தேவை. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:13, 4 சூன் 2017 (UTC)
 
[[File:Madras Christian college Chennai - gate.jpg|200px|thumb\rightசென்னை|right|சென்னை கிறித்துவக் கல்லூரி]]
{{ping|AntanO}}, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 21:05, 4 சூன் 2017 (UTC)