"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,527 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
டானா(Dana) மற்றும் இஸ்ட்ரன்ஸ்(Strunz) ஆகியவை கனிமங்களை வகைப்படுத்தப் பயன்படும் இரு பொதுவான முறைகளாகும். இந்த இரண்டு முறைகளுமே கனிமங்களின் முக்கிய வேதித்தொகுதிகளைச் சார்ந்த இயைபு மற்றும் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வகைப்படுத்துகின்றன. தனது சம காலத்தில் முன்னணி நிலவியலாளரான ஜேம்சு ட்வைட் டானா 1837 ஆம் ஆண்டில் கனிமவியலின் முறை (System of Mineralogy) என்ற நுாலை முதன் முதலாக வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் அந்த நுால் எட்டாவது பதிப்பைக் கண்டது.
 
கனிமங்களுக்கான டானா வகைப்பாடு நான்கு பகுதி எண் முறையை ஒவ்வொரு கனிமத்திற்கும் குறிக்கிறது. இதனுடைய முதலாவது எண்ணான பிரிவு எண் (class) முக்கிய இயைபைக் கொண்ட தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், இரண்டாவது எண், அதாவது வகை குறித்த எண் (type) கனிமத்தில் உள்ள நேர்மின் அயனிகள் மற்றும் எதிர் மின் அயனிகளுக்கிடையேயான விகிதாச்சாரத் தொடர்பையும், கடைசி இரண்டு எண்கள் கனிமங்களை ஒரே வகை மற்றும் பிரிவில் உள்ள கனிமங்களை அமைப்புரீதியான ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு முறைப்படுத்துகின்றன. மற்றுமொரு முறையான இஸ்ட்ரன்ஸ்(Strunz) வகைப்பாடானது மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. இது [[கார்ல் ஹகோ இஸ்ட்ரன்ஸ்]] என்ற செருமன் நாட்டு கனிமவியலாளரின் பெயரால் அழைக்ப்படுகிறது. இந்த முறையானது டானா முறையையே அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் இம்முறை வேதியியல் பண்புகள் மற்றும் அமைப்பு வரன்முறைகளையும் இணைத்தே கையாள்கிறது. அமைப்பைப் பொறுத்தவரை வேதிப்பிணைப்புகள் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் கவனிக்கிறது.<ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=558-59}}</ref>.
 
கனிமங்களில் 45 விழுக்காடு கண்டுபிடிப்பாளர்கள் அல்லது கனிமவியலாளர்களின் பெயர்களைக் கொண்டும், 23 விழுக்காடு கண்டறியப்பட்ட இடங்களின் பெயர்களைக் கொண்டும், 14 விழுக்காடு கனிமங்கள் அவற்றின் வேதி இயைபை அடிப்படையாகக் கொண்டும் 8 விழுக்காடு கனிமங்கள் இயற்பியல் பண்புகளைக் கொண்டும் பெயரிடப்பட்டுள்ளன. இவையே கனிமங்களின் பெயரிடுதலில் உள்ள பெயர் தோற்ற வரலாற்றின் அடிப்படையாகும்.[38][40] கனிமங்களி்ன் பெயர்களில் காணப்படும் ஐட் என்ற விகுதியானது "இவற்றுடன் தொடர்புடைய அல்லது உடமையான" என்ற பொருளைத் தரக்கூடிய பழங்கால கிரேக்க விகுதியான - ί τ η ς (-ஐட்டுகள்), இலிருந்து பெறப்பட்டுள்ளது.[41]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2302817" இருந்து மீள்விக்கப்பட்டது