கனிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
ஒரு திண்மக் கரைசலின் தொடரில் இறுதி உறுப்புக் கனிமங்கள் மாறுபாட்டிற்குத் தகுந்தவாறு வேதியியல் இயைபு மாறுபடும். உதாரணமாக, பிளாகியோகால்சு ஃபெல்ட்சுபார்கள் ஒரு தொடர்ச்சியான சோடியம் நிறைந்த கனிமங்களான அல்பைட்டு (NaAlSi<sub>3</sub>O<sub>8</sub>) முதல் கால்சியம் நிறைந்த அனார்தைட்டு (CaAl<sub>2</sub>Si<sub>2</sub>O<sub>8</sub>) வரையான தொடரை உள்ளடக்கியுள்ளன. இவற்றிற்கு இடையே தொடர்ச்சியான நான்கு இடைநிலை வகைகளை (சோடியம் நிறைந்தவற்றிலிருந்து , கால்சியம் நிறைந்தவற்றுக்கான வரிசையில்) அதாவது, ஓலிகோகால்சு, அன்டெசைன், லேப்ராடோரைட் மற்றும் பைடோவ்னைட் ஆகிய கனிமங்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=586 | isbn=978-0939950812}}</ref> மெக்னீசியம் நிறைந்த ஃபோர்ஸ்டெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபைலைட் போன்ற ஒலிவைன் தொடர்கள் மற்றும் மாங்கனீசு நிறைந்த ஹியூப்னெரைட்டு மற்றும் இரும்பு-நிறைந்த ஃபெர்பிராய்டு போன்ற வால்ஃப்ராமைட் தொடர்கள் ஆகியவை மற்ற உதாரணங்கள் ஆகும்.
 
== கனிமங்களின் இயற்பியல் பண்புகள் ==
 
கனிமங்களை வகைப்படுத்துவது எளிமையானதிலிருந்து கடினமானது வரை வீச்சைக் கொண்டுள்ளது. ஒரு கனிமமானது பலவிதமான இயற்பியல் பண்புகளால் அடையாளம் காணப்படலாம். சில கனிமங்கள் சமமான மற்ற உள்ளீடுகள் இல்லாத காரணத்தால் எளிதில் முழுமையாக அடையாளம் காணப்படக் கூடியதாக உள்ளன. மற்ற சில கனிமங்களைப் பொறுத்தவரை சிக்கலான ஒளியியல், வேதியியல் மற்றும் X-கதிர் சிதறல் பகுப்பாய்வு போன்ற அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்படுகின்ற முறைகளைப் பயன்படுத்தியே வகைப்படுத்த முடிகிறது. படிக அமைப்பு மற்றும் படிகப்பண்பு, கடினத்தன்மை, பளபளப்பு, நிறம், இழை வரியமைப்பு, ஒளி ஊடுருவும் தன்மை, பிளவும் முறிவும், ஒப்படர்த்தி ஆகிய இயற்பியல் பண்புகள் கனிம வகைப்படுத்தலுக்கு பயன்படுகின்றன. காந்தவியல் பண்பு, கதிர்வீச்சு, உடனொளிர்வு, நின்றொளிர்வு, பீசோ மின்சாரம், இழுபடு தன்மை, அமிலங்களுடனான வினைபடுதன்மை போன்ற சில பண்புகள் அரிதாகப் கனிம வகைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கனிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது