இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
[[படிமம்:Palazzo Surian Bellotto (Venice).jpg‎|thumb|200px|right| உரூசோ தூதரின் செயலாளராகப் பணிபுரிந்த காலத்தில், பிரான்சின் தூதரகமாக இருந்த கட்டிடம்.]]
1743 தொடக்கம் 1744 வரை, வெனிசில் இருந்த பிரான்சு தூதருக்கு இவர் செயலாளராக இருந்தார். 11 மாதங்கள் வரை பணிபுரிந்த பின்னர் இவர் பணிநீக்கப்பட்டார். விசாரணைக்குப் பயந்து இவர் அங்கிருந்து பாரிசுக்குத் தப்பிச் சென்றார். அங்கே அவர் ஓரளவு படித்திருந்த தையல்காரி ஒருவருடன் நட்புக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். உரூசோவின் கூற்றுப்படி அவருக்கு இத் தையல்காரி மூலம் ஐந்து பிள்ளைகள் பிறந்தன. பிள்ளைகள் பிறந்தவுடனேயே அவை [[அனாதை இல்லம்|அனாதை இல்லங்களுக்கு]] அனுப்பப்பட்டன. அனாதை இல்லத்துப் பிள்ளைகளின் இறப்பு வீதம் அதிகமாக இருந்த அக் காலத்தில் இப் பிள்ளைகளில் பல இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வி, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் அறியப்பட்ட கோட்பாட்டாளராக விளங்கிய உரூசோ, தனது பிள்ளைகளைக் கைவிட்டது குறித்து இவரது எதிரிகள் இவரைக் கடுமையாக விமர்சித்தனர். தான் ஒரு ஏழைத் தந்தை என்றும், அநாதை இல்லங்களில் பிள்ளைகள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் உரூசோ கூறினார்.
 
==ரூசோவின் கல்விச் சிந்தனைகள்==
 
ரூசோ தமது கல்வி சார்ந்த தத்துவக் கருத்துக்களைச் '''சமூக ஒப்பந்தம்''', '''எமிலி''' ஆகிய நூல்களின் வழியாக முன்வைத்தார். ரூஸோவின் இயற்பண்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் கல்விக் கோட்பாடுகளின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
 
குழந்தைகள் இயற்கையோடு இயைந்து வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையின் போக்கில் இயற்கையின் நியதிகளின் படி வாழவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் ரூஸோ. இதுவே அவரின் தலையாய குறிக்கோளாக அமைந்திருந்தது. இவர் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது கல்வியே என்றார். அதேவேளை வாழ்க்கைக்குக் குழந்தைகளைத் தயாரிப்பது கல்வியின் பணியன்று; வாழ்க்கையே கல்வி ஆகுமென்று வலியுறுத்தினார்.
 
குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதைக் காட்டிலும் கல்வியைப் பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துதல் அவசியம். வாழ்வியல் சூழலில் காணப்படும் பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வுகளைக் குழந்தைகள் தாமே தீர்க்க வழிகாட்டுதல் வேண்டும் என்றார். இதற்காகக் கல்வியில் [[சிக்கலைத் தீர்க்கும் முறை]], [[விளையாட்டு முறை]], [[தாமே கண்டறி முறை]] முதலான கற்பித்தல் முறைகளை ரூசோ முன்மொழிந்தார்.
 
கல்வி முறையில் நினைவாற்றல் திறனை விட செயல் வழிக் கற்றல் மூலம் கற்றலை நிலைப்படுத்திட வேண்டும். அதற்கு கற்றல் கற்பித்தல் நிகழ்வில் குழந்தை மைய கற்றல் (Child Centered Learning Approach) அணுகுமுறையை வலியுறுத்தினார். மேலும் கற்பித்தலின்போது கற்றல் உபகரணங்களின் பயன்பாட்டின் இன்றியமையாத தன்மையைக் குறிப்பிட்டார். கற்போரின் விருப்பு, வெறுப்புகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றிற்கேற்ப கல்வியின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும் என்றார் ரூசோ.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/25/%3Ffn%3Df13082510%26p%3D1&ved=0ahUKEwjPpu2708bUAhUHLo8KHXnyBa4QFggcMAA&usg=AFQjCNEGrmSNjZusACAU5HFZ9jYYdp28Zg&sig2=Fi5tzCtUcexuzvzAHqPkSA">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/08/25/?fn=f13082510&p=1 | title=ரூஸோவின் தத்துவக் கருத்துக்களும் தற்காலக் கல்வி முறையும் | accessdate=18 சூன் 2017}}</ref>
 
கற்றலில் புலன்வழிக் கற்றலை முதன்மைப்படுத்தினார் ரூசோ. இவரின் கல்வி சார்ந்த தத்துவக் கருத்துக்கள் அனைத்தும் குழந்தை உளவியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் இயற்கையே இதயத்தின், ஆன்மாவின் வழிகாட்டி என்று அறைகூவல் விடுத்தார்.
 
==ரூசோவின் கல்வித் திட்டங்கள்==
 
===குழந்தைப் பருவம் (பிறப்பு முதல் 2வயது வரை)===
 
இப்பருவத்தில் புதிய அனுபவங்களைப் பெற பெற்றோர் பல்வேறு வாய்ப்புகள் வழங்க வேண்டும். தாய்,தந்தையரின் மிகையான கட்டுப்பாடுகள் பொருத்தமற்றது. இப்பருவத்தில் பின்பற்றலும் போலச் செய்தலும் மிகுதியாக வெளிப்படும் என்பதால் நன்னடத்தைப் பண்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இப் பருவத்தில் இசை, நடனம் கற்பிக்கப்படுதலை ரூஸோ முன்வைத்தார்.
 
===பிள்ளைப் பருவம் (02-12 வயது வரை)===
 
இப்பருவத்தில் பார்த்தல்,கேட்டல்,பேசுதல் உள்ளிட்ட புலன்களின் நேரடி அனுபவத்தைப் பெறவாய்ப்புகள் கொடுக்கப்படுதல் நல்லது. இதற்கு விளையாட்டு முறையும் (Play Way Method) செயல் வழிக்கற்றல் (Learning by Doing) போன்றவை இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
 
===முன் இளமைப் பருவம் (12-15 வயது வரை)===
 
இது அறிவு வளர்ச்சிக்கான பருவமாகும். புவியியல், வானவியல் முதலானவற்றை கற்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இப்பருவத்தினருக்குக் கல்வியை அளிக்கக் கூடாது. கல்வியைப் பெறுவதற்கான திறன், தொழிற்பயிற்சி, ஆராய்ச்சி மனப்பான்மை ஆகியவற்றை அளிக்க வாய்ப்புகள் வழங்குதல் வேண்டும் என்றார்.
 
===இளமைப் பருவம் (15 - 19 வயது வரை)===
 
இப்பருவத்தினருக்குச் சமூக உணர்வும், சமுதாயத் தொடர்பும் வளர்ச்சியுறும். ஆதலால், வரலாறு, இலக்கியம், சமூக அறிவியல் போன்றன பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றார்.
 
===முதிர்ச்சிப் பருவம் (20 வயதுக்கு மேல்)===
 
இப்பருவத்தினருக்கு இலக்கியம், நாடகம் ஆகியவற்றைக் கற்பித்து சமுதாயப் பொருத்தப்பாடு அடையச் செய்ய வேண்டும். உலக அனுபவமும் சுற்றுப்புற அறிவும் மேம்பட, களப் பயணம் அவசியமாகும். அரசியல் ஈடுபாடு உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
 
குழந்தைகள் இயல்பாக இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் ஆகிய ஊடகங்கள் மூலமாகக் கல்வியைப் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ரூசோவின் கல்விக் கொள்கையில் இயற்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது