உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
==வரலாறு==
திருச்சபையுடன் அரசர் ஒருங்கிணைத்து உருவாக்கியதே உரோமைப் பேரரசு ஆகும். பண்டைய உரோமைப் பேரரசில் கிருத்துவ மதத்திற்கு இடமில்லை. ஆனால், நவீன உரோமைப் பேரரசில் கிருத்துவ சமயம் அரசின் சமயமாக அங்கீகாரம் பெற்றிருந்தது. அதிகாரத்தின் மையத் தலைமையிடமாக உரோம் விளங்கியது. கிருத்துவ அரசுக்களை சகோதரத்துவத்துடன் ஒருங்கிணைப்பதைப் புதிய உரோமைப் பேரரசின் தலையாயக் குறிக்கோளாக இருந்தது. பேரரசில் அரசர் முடிசூடப்படுதல் என்பது போப்பாண்டவரால் நிகழ்த்தப்பட்டு வந்தது. முந்தைய உரோமைப் பேரரசானது இத்தாலிய முறையில் இயங்கி வந்தது. புதிய பேரரசு இயல்பிலும் ஒழுக்கத்திலும் கிருத்துவ முறையினைக் கடைப்பிடித்தது. அரசரிடம் பரந்துபட்ட அதிகாரம் இருந்தது. அரசரின் கட்டுப்பாட்டில் போப்பாண்டவர் செயல்பட வேண்டும் என்றிருந்தது. பிறகு, போப்பாண்டவருக்கு, பேரரசர்களும் மற்ற உலகத்தாரும் உரித்தானவர்கள் என்கிற அதிகாரம் நடைமுறையில் இருந்தது. ஐரோப்பாவில் பல பகுதிகளாகப் பிளவுபட்டிருந்த அரசுகளை, போப்பாண்டவரும் பேரரசரும் ஒரே பேரரசாகக் கொண்டுவந்தனர். அதுபோல், குடியரசுத் தன்மையைப் பலவீனம் செய்து பரம்பரை ஆட்சிமுறையை இது வலுப்படுத்தியது. நவீன உரோமைப் பேரரசானது நிலமானிய முறையை முற்றாகப் புறந்தள்ளியது. குறிப்பாக, ஜெர்மனியில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்தியது. இதுதவிர, இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உரோமைப் பேரரசு தோற்றுவித்தது.<ref>{{cite book | title=சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி ஒன்று | publisher=பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6 | year=2017 | pages=ப. 171.}}</ref>
 
==நகரங்கள் உருவாக்கம்==
உரோமைப் பேரரசில் புதிய நகரங்கள் உருவாகின. இந்நகரங்கள் இடைக்காலத்தில் கைவினைத் தொழில் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு மையமாகத் திகழ்ந்தன. தொடக்கக் காலத்தில் இப்பேரரசில் தோற்றுவிக்கப்பட்ட நகரங்கள் சிறியனவாகக் காணப்பட்டன. கைவினைக் கலைஞர்களின் பெருக்கத்தால் நகரங்களில் வியாபாரம் பெருமளவில் வளர்ந்தது. மேற்கு ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ள, இத்தாலியின் அமைவிடம் ஏற்றதாக இருந்தபடியால் நகரங்கள் அதிகம் பயனடைந்து வளரக் காரணமாயின. ஜெனிவா, பிளாரன்ஸ், வியன்னா போன்ற நாடுகள் வர்த்தக மையங்களாக மாற்றம் பெற்றன. ஜெனிவா மற்றும் வெனிஸ் ஆகிய நகரங்கள் கடற்கரை நகரங்களாக அமைந்திருந்த காரணத்தால், மிலன், பிசா ஆகிய நகரங்கள் வாணிப வழித் தடங்களாக உருவாகின. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலுள்ள நகரங்கள் பலவும் துறைமுகங்களாகவும் வர்த்தக வாணிப மையங்களாகவும் வளர்ச்சிப் பெறத் தொடங்கின. இந்நகரங்கள் இடைக்கால ஐரோப்பிய நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த இடங்களாகின.
 
 
=== உரோமப் பேரரசர்கள் சிலரின் படத்தொகுப்பு ===
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது