மின்தூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 109:
 
மின்தூண்டிகளில் பக்கவிளைவுகள் அதிகம் காணப்படுவதால் அவை இலட்சிய நடத்தையிலிருந்து மாறுபடுவதாலும், மின்காந்தத் தலையீட்டை உருவாக்குவதாலும், மின்தூண்டிகளின் பௌதிக அளவு காரணமாக அவற்றை ஒருங்கிணை சுற்றுக்களில் பயன்படுத்த முடியாமையினாலும் நவீன இலத்திரனியல் சாதனங்களில், குறிப்பாக கையடக்கக் கருவிகளில் மின்தூண்டிகளின் பயன்பாடு வீழ்ச்சியடைந்து வருகிறது. மின்தூண்டிகளுக்குப் பதிலாக, கொள்ளளவிகளிலிருந்து மின்தூண்டத்தைப் பெறத்தக்க சுழலி போன்ற செயல்நிலைக் கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
==மின்தூண்டிக் கட்டமைப்பு==
[[File:Common mode choke 2A with 20mH inductance.jpg|left|thumb|இரு 20 mH சுருள்களைக் கொண்ட மெல்லிரும்பு அகணி மின்தூண்டி.]]
 
வழமையாக ஒரு மின்தூண்டியானது கடத்து பொருளினாலான, பொதுவாக காவலிடப்பட்ட செப்புக்கம்பியிலாலான, சுருளினையும், அதன் நடுவே நெகிழி அல்லது அயக்காந்தப் பொருளினாலான அகணியையும் கொண்டிருக்கும். அயக்காந்த அகணியின் உயர் உட்புகவிடுமியல்பு காரணமாக மின்தூண்டியின் காந்தப்புலம் அதிகரிப்பதோடு, அவை மின்தூண்டிக்கு மிக நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இதனால் மின்தூண்ட அளவு அதிகரிக்கும். தாழ் மீடிறன் மின்தூண்டிகள், மின்மாற்றிகள் போல உருவாக்கப்படும். இங்கு சுழிப்போட்டத்தைக் குறைக்கும் வகையில் அகணியிலுள்ள உருக்கு தகடுகளாகப் பயன்படுத்தப்படும். மெல்லிரும்பு அகணிகள் கேள் மீடிறன் அலைகளுக்கு அதிகமான மீடிறனுடைய சமிக்ஞைச் சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், உயர் மீடிறன்களில் சாதாரண இரும்புக் கலப்புலோகப் பொருட்கள் அதிக சக்தி இழப்பை ஏற்படுத்தும் அதேவேளை இவை ஒப்பீட்டளவில் குறைந்த சக்தி இழப்பையே ஏற்படுத்துகின்றன. மின்தூண்டிகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு இரும்பு அகணியைச் சூழ காவலிட்ட கம்பியைச் சுற்றுவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. சில மின்தூண்டிகளில் கம்பி வெளித்தெரியுமாறு காணப்படும் அதேவேளை, ஏனையவை கம்பியை அகணியினுள் மறைத்துக் காணப்படும். இவை காப்பிடப்பட்டவை எனப்படும். சில மின்தூண்டிகளில் மாற்றக்கூடிய அகணி காணப்படும். இதன்மூலம் அம்மின்தூண்டியின் மின்தூண்ட அளவை மாற்ற முடியும். அதியுயர் மீடிறன்களை தடைசெய்யும் வகையில் பயன்படுத்தப்படும் மின்தூண்டிகள் கம்பியொன்றின் மீது இரும்பு குமிழை இழைப்பதன் மூலம் உருவாக்கப்படும்.
 
சிறிய மின்தூண்டிகள், மின்சுற்றுப் பலகைகளில் நேரடியாக சுருளி வடிவில் வரைவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. சில தள மின்தூண்டிகள் தள அகணியைப் பயன்படுத்துகின்றன.
 
சிறிய பெறுமதியுடைய மின்தூண்டிகள் ஒருங்கிணை சுற்றுக்களிலும் உருவாக்கப்பட முடியும். மூவாயிகளை உருவாக்கம் அதே செயன்முறை இங்கும் பயன்படுத்தப்படுகிறது. சுருளி வடிவிலான அலுமினியம் தொடுப்பிணைப்பிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். எனினும், சிறிய அளவு காரணமாக மின்தூண்டத்தின் அளவும் குறைவடையும். எனவே, பொதுவாக சுழலி எனப்படும் சுற்று மூலமாக கொள்ளளவி மற்றும் செயல் நிலைக் கருவிகளைப் பயன்படுத்தி மின்தூண்டிகள் போலச் செயற்படும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
{{clear}}
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்தூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது