இரும்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 118:
கி.மு.500 தொடங்கி கி.பி.300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டு காலத்திய தமிழகத்தின் வரலாற்றினை இரும்புக்காலம் என்று தொல்லியலாரும், சங்க காலம் என்று இலக்கிய திறனாய்வாளர்களும் கணக்கிட்டுள்ளனர். இக்காலக் கட்டத்தின் வரலாற்றினை அறிய மூன்று வெவ்வேறு சான்றுகள் உபயோகப்படுகின்றன. அவை: (1) தொல்லியல் பொருட்கள் (2) செம்மொழி இலக்கியங்கள், குறிப்பாக எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் (3) பழந்தமிழ்க் கல்வெட்டுகள். இவற்றோடு பானையோட்டு எழுத்துக் கீறல்களும் கணக்கில் கொள்ளப்படும். இவ்வகைச் சான்றுகளை உருவாக்குவதற்கு இரும்புக்கருவிகள் பெரிதும் உதவியிருக்கக்கூடும். அக்காலத்து மக்கள் பானையோட்டுக் கீறல்களை இரும்புக்கருவியைக் கொண்டே உருவாக்கியிருப்பர். அதே போன்று, இரும்பினாலான எழுத்தாணியைக் கொண்டே செம்மொழியிலக்கியங்களை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவற்றைப் படிப்பறிவுகொண்ட சிலர் செய்திருக்க வேண்டும். இது ஒருவகையான தொழில்நுட்பமாகும். வரலாற்றில் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். எப்போதும் தொழில்நுட்பம் மக்களிடையே ஒரு பிளவினைத் தோற்றுவிக்கும். அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவர்கள் தொழில்நுட்பத்தினைக் கையாண்டு வரலாற்றில் நிலையான சான்றுகளை உருவாக்க விரும்புவர். மேற்குறிப்பிடப்பெறும் சான்றுகள் அவ்வாறு தோன்றியிருக்ககூடும். இச்சான்றுகளிடையே தொடர்பும், தொடர்ச்சியும் இருப்பதை அறியமுடிகிறது. காட்டாக, செம்மொழியிலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல சொற்கள் மற்றும் பெயர்கள் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுள்ளன.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=17&cad=rja&uact=8&ved=0ahUKEwilg6L8v-PUAhXIuI8KHcHYBkIQFgh2MBA&url=http%3A%2F%2Fkeetru.com%2Findex.php%2F2014-03-08-04-39-26%2F2014-03-14-11-17-85%2F22466-2012-11-22-09-39-22%3Fcode%3D1%26state%3Dtt&usg=AFQjCNFNqiJUfC6O5Nv1Zsw5xeK_4X-22Q">{{cite web | url=http://www.keetru.com/index.php | title=இரும்புக்காலமும் சங்க இலக்கியமும் | accessdate=29 சூன் 2017}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{^}}
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இரும்புக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது