சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
=== பிற சமவுடைமை நாடுகள் ===
இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள்.
 
===சமவுடைமையும் மூன்றாம் உலகநாடுகளும்===
 
1917 இல் இரஷ்யா ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கிய நாடாகக் காணப்பட்டது. ஐரோப்பிய நாடு என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. எனினும், இரஷ்ய உளவியல் தன்மைகள், கீழை நாட்டு மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இரஷ்ய கிறித்தவம் கத்தோலிக்க, சீர்திருத்த கிறித்தவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பழைமைவாத கிறித்தவத்தைப் பின்பற்றி வந்தது. ஏனெனில், கத்தோலிக்கக் கிறித்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சியாளர்களைத் தழுவிக் காணப்பட்டது. அதுபோல், சீர்திருத்த கிறித்தவம் நவீன ஐரோப்பிய முதலாளி வர்க்கத்துடன் இணங்கி செயற்பட்டது. பழமைவாத கிறித்தவம் மட்டுமே ரஷ்ய பூர்வீகத்தின் தூய்மையை தன்னகத்தே கொண்டு விளங்கியது. இத்தகைய சூழலில் சமவுடைமைப் புரட்சி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே பல்வேறு சமவுடைமையாளர்கள் நம்பினர்.
 
இரஷ்யாவில் நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்ந்து வந்தன. ஜார் மன்னரின் ஆட்சியானது, தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றார் லெனின். அவர், அக்டோபர் புரட்சியானது அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களை விடுதலை செய்யும் என்றும் புரட்சியின் போது அறிவித்தார். 1917 டிசம்பர் 31 ஆம் நாள் முடிந்து மறுநாள் புத்தாண்டு அன்று பின்லாந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனிநாடானது.
 
லெனின் ஆசிய மக்களின் ஆதரவாளராகக் காணப்பட்டார். அடிமைக்குள்ளாக்கப்பட்ட ஆசிய தேசிய இனங்கள் எழுச்சி அடைவதை அவர் பெரிதும் எதிர்நோக்கினார். அனைத்துலக அரசியலில் ஆசிய தேசிய இனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை அடையும் என்று நம்பினார். இவரது இரண்டு கருத்தியல்கள் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு முக்கியப் பங்காற்றின. அவை: ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள் ஆகும். இவற்றுள், ஏகாதிபத்தியம், உலக முதலாளியத்தின் உருவாக்கத்திலும் நிலைகொள்ளலிலும் காலனிய நாடுகளின் நிலை பற்றியது. இரண்டாவது, ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியில் தேசிய விடுதலை இயக்கங்களின் பங்களிப்புகள் குறித்ததாகும். இதில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்னும் கருத்து முக்கியமானது.
 
லெனின், உலக முதலாளித்துவத்தை ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் தனியாக நின்று வீழ்த்திவிடமுடியாது உறுதியாக இருந்தார். தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியில் உலக முதலாளித்துவம் கடுமையாகப் பலவீனப்படும் என்று எண்ணினார்.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியினைச் சமவுடைமைச் சமூகம் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை. தேசிய விடுதலை இனங்கள் பற்றிய லெனினது பார்வை புறந்தள்ளப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான பனிப்போரில் சோவியத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமே விடுதலை பெற்ற நாடுகளின் தலையாயப் பணியாக அமைந்தது. மூன்றாம் உலக நாடுகள் சமவுடைமையின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், மூன்றாம் உலக நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை அவற்றிற்குரிய தனித்த பண்புகளுடன் பேச உலக கம்யூனிச இயக்கம் முன்வரவில்லை.
 
{{பொருளாதார முறைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சமூகவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது