சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 30:
 
==ஹார்னியின் விமர்சனம்==
சிக்மண்ட் பிராய்டின் கருத்துக்களை எதிர்க்கும் பெண்ணியத் திறனாய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கேரன் ஹார்னி உள்ளார். ''ஆணுறுப்பு குறித்து சிறுமிகளுக்குள்ள பொறாமை'' என்கிற கருத்தாக்கமானது அபத்தமானதாகும் என்கிறார். சிறுமிகள் தாங்கள் பெண்கள் என்பதனைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். மேலும், தங்களுடைய பாலுறுப்புகளைப் பற்றிய தெளிவும் கொண்டுள்ளனர். சிறுவர்களுக்குரிய ஆணுறுப்பின்மீது உருவாகும் ஆர்வமானது பொறாமையினால் ஏற்படுவதல்ல. மாறாக, ஆணைப்போல், தந்தையைப்போல் இருக்க முடியாது என்பதாலும், தந்தையர்கள் வெளிக்காட்டும் பாரபட்சத்தினாலும், பெண்ணாக இருப்பதால் ஏற்படும் இழப்புகளாலும் பெந்தன்மையிளிருந்து அவர்கள் விடுபட முயல்கின்றனர். அதேபோல், சிறுவர்களும் தம்மை '''வேறாட்களாக''' உணர்வதும் நிகழ்கிறது. கருப்பைக் குறித்த சிறுவர்களின் பொறாமையானது பெண் மட்டுமே உயிரை உருவாக்கிட முடியும் என்பதன் அடிப்படையில் உருவாவதாகும்.<ref>வ.கீதா & கிறிஷ்டி சுபத்ரா, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், பாரதி புத்தகாலயம், சென்னை-18, 2009, பக். 102- 103.</ref> ''பெண் குழந்தை, தன்னை முழுமையானவளாக உணர சாத்தியம் உண்டு'' எனக் கூறும் ஹார்னி மற்றும் ஏனைய பெண் உளவியல் அறிஞர்களின் கருத்தைப் பொவார் முழுதாக அங்கீகரிக்கின்றார். தவிர, சிறுமி ஒருத்தியின் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளமாக, சமுதாய இடமும் பாத்திரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.<ref>வ.கீதா & கிறிஷ்டி சுபத்ரா, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், பாரதி புத்தகாலயம், சென்னை-18, 2009, ப. 103.</ref>
 
==பெண்ணியம் குறித்த கருத்துகள்==
1976 இல் ஜான் ஜெராசி (John Gerassi) உடனான நேர்காணலின்போது, பெண்ணிய இயக்கமானது கருத்து நிலையிலிருந்து செயல் வடிவிற்கு மாற்றம் பெற்றுள்ளது என்றும், பெண்ணியச் செயல்பாடுகளுக்கான வலுவான எதிர்ப்புகள் நீங்கி, ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைகளில், அவற்றின் தீவிரத்தன்மைகள் குறைந்து ஒழுங்கமைதி ஏற்பட்டுள்ளது என்றும், பெண்ணியப் படைப்புக்களில் இத்தகைய மாற்றத்தைக் காண முடியும் என்றும் பொவார் தெரிவித்துள்ளார்.<ref>முனைவர் தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை- 113, 2006, ப. 182.</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிமோன்_த_பொவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது