எர்மான் எமில் பிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
1875 ஆம் ஆண்டில் இசுடாசுபர்க் பல்கலைக் கழகத்தில் வான் பேயருடன் பணிபுரிந்த பொழுது, பிசர் பினைல்ஐட்ரசீனைக் கண்டுபிடித்தார். <ref>{{cite journal | last1 = Fischer | first1 = E | year = 1875 | title = Ueber aromatische Hydrazinverbindungen | trans_title = On aromatic hydrazine compounds| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k90680z/f589.zoom.langEN | journal = Berichte der deutschen chemischen Gesellschaft | volume = 8 | issue = | pages = 589–594 | doi=10.1002/cber.187500801178}}</ref> (இந்த சேர்மமானது பின்னாளில் பிசர் சர்க்கரைகள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது) முனிச் பல்கலைக் கழகத்தில் இருந்த பொழுது, பிசர் ஐதரசீன்கள் தொடர்பான தனது ஆய்வை தனது மைத்துனர் ஓட்டோ பிசருடன் இணைந்து தொடர்ந்தார். பிசரும் ஓட்டோவும் இணைந்து ட்ரைபினைல்மீத்தேன் சாயங்களின் அமைப்பு தொடர்பான ஒரு புதிய கருத்தியலை வெளியிட்டு அதனைச் சோதனை மூலமும் நிரூபித்தார்.
எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில், பிசர் தேயிலை, காபி, சாக்கலேட்டின் கோகோ போன்றவற்றில் செயல்படும் கொள்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவற்றில் காணப்படும் காபைன் மற்றும் தியோபுரோமின் ஆகியவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு இத்தகைய சேர்மங்களின் தொடர் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும் அவற்றின் தொகுப்பு முறைகளையும் நிறுவினார்.
 
இருப்பினும், ப்யூரின்கள் மற்றும் சர்க்கரைகள் குறித்த ஆய்வுகளே பெருமளவு பிசரின் புகழுக்குக் காரணமாக அமைந்துள்ளன. 1882 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தாவரப் பொருட்களிலிருந்து பெறப்படும் அடினைன், சாந்தைன், கேபைன் மற்றும் விலங்கினக் கழிவுகளில் இருந்து பெறப்படும் யூரிக் அமிலம், குவானைன் போன்ற அக்கால கட்டத்தில் சிறிதாகவே அறியப்பட்ட சேர்மங்கள் அனைத்தும் ஓரின வரிசைச் சேர்மங்கள் என்றும், ஒன்றிலிருந்து மற்றொரு சேர்மம் பெறப்படலாம் என்றும் தெரியவந்தன. மேலும், இவை அடிப்படை அமைப்பான இருவளைய நைட்ரசனைக் கொண்ட, குறிப்பிடத்தக்க பண்பு கொண்ட யூரியா தொகுதியை உள்ளடக்கிய வெவ்வேறு ஐதராக்சில் மற்றும் அமினோ வழிப்பொருட்களோடு தொடர்புடையவையாகவும் இருந்தன. 1884 ஆம் ஆண்டில் இதுவரை பிரித்தறியப்படாத, கருத்தியலான, மேற்காணும் பண்புகளை உடைய தாய்ப்பாருளை அவர் முதன் முதலில் பியூரின் என அழைத்தார். இந்தப் பியூரினை 1898 ஆம் ஆண்டில் அவர் தொகுப்பு முறையில் தயாரித்தும் காட்டினார். எண்ணற்ற, இயற்கையில் கிடைக்கும் பொருட்களுக்கு கிட்டத்தட்ட ஒத்துப்போகும் தன்மையுடைய செயற்கை வழிப்பொருட்கள் அவரது ஆய்வகத்திலிருந்து 1882 முதல் 1896 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவரத் தொடங்கின.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எர்மான்_எமில்_பிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது