தொன்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
 
== தமிழ் இலக்கிய்களில் தொன்மம் ==
 
தமிழ் இலக்கியங்களில் தொன்மங்கள் சார்ந்த பண்டைய புராணச் செய்திகள் இருக்கின்றது. இப்புராணச் செய்திகள் தற்கால வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைப்பதற்கு மாற்று வடிவில் பயன்படுகின்றன. இராமயண, மகாபாரத செய்திகள், அகநானூறு, நற்றிணை, கலித்தொகை ஆகிய இலக்கியங்களில் காணப்படுகின்றன.
 
== கலித்தொகையில் தொன்மம் ==
 
இராவணன் கயிலை மலையைத் தூக்க முயன்ற செய்தியைக் கபிலர் கலித்தொகையில்,
 
'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல' (கலி. 38)
 
என்ற பாடலின் வாயிலாக இராமாயணக் கதையை விளக்குகிறார். இதேபோல கலித்தொகைப் பாடல் எண் 25-ல் மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
 
== 'முருகன்' சார்ந்த தொன்மம் ==
 
தமிழில் முருகன் சார்ந்த தொன்மக் கருத்துக்கள் மிகுதியாக உள்ளன. அழகு, அச்சம், ஆற்றல், சினம், அழிவு ஆகியவற்றை உணர்த்த தமிழ் புலவர்கள் தொன்மத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வம் ஏறி விளையாடுவதை சாமியாடல் என்றும், வெறியாடுதல் என்றும், அடக்க முடியாத சினத்தை முருகச் சீற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
'முருகன் நற்போர் நெடுவேல் ஆவி' (அகம்.1)
 
'முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்' (அகம்.156)
 
'முருகச் சீற்றத்து உருகெழு குரிசில்' (புறம். 16)
 
'சூர்நவை முருகன் சுற்றத் தன்ன' (புறம். 23)
 
' முருகு இயன்றன்ற உருவினை ஆகி (மதுைரக் - 724)
 
முதலான பல பாடல்கள் முருகத் தொன்மங்களைச் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன.
 
== உலக இலக்கியங்களில் தொன்பம் ==
 
சுமேரிய இலக்கியத்தில் உலகத்தின் தோற்றம், கடற் பேரழிவுகள், உழவுத்தொழில் கருவிகளின் தோற்றம், கடவுளர் பிறப்பு, பாதாள உலகம் ஆகியவை சார்ந்து தொன்மச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கிரேக்கத்தின் இலியடும், ஒடிசியும் தொன்மக் களஞ்சியங்களாக விளங்குகின்றன. ஹீசியட் எழுதிய 'தியோஜினி'என்ற இலக்கியம் கடவுளர்களின் பிறப்பையும், வாழ்க்கையையும் சுற்றி கூறப்பட்டுள்ளது. இவை போன்ற பல இலக்கியங்கள் தொன்மச் செய்திகளைச் தாங்கியுள்ளளது.
 
== சான்று ==
 
1. கி. இராசா, ஒப்பிலக்கியம், பார்த்திபன் பதிப்பகம், திருச்சி, ஆண்டு 2006.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது