இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
=== விசை இயங்குநுட்பம் ===
முற்கால இரட்டைகள், இரு குழல்களுக்கும் தனித்தனியாக, இரண்டு விசைகளை கொண்டிருக்கும். அவை விசைக் காப்புக்குள், முன்னும் பின்னுமாக அமைந்து இருக்கும். இரண்டு விசைகளையும், இயக்குவதற்கு ஆள்காட்டிவிரல் மட்டுமே பிரயோகிக்கப்படும்; விசைக் காப்புக்குள் இரு விரல்களை வைத்து சுடுகையில், பின்னுதைப்பின் தூண்டுதலால், எதிர்பாரா இரட்டை-வெடிப்பு ஏற்படலாம். இரட்டை விசை வடிவமைப்புகள் பொதுவாகவே வலதுகை சுடுநருக்கு ஏற்றவாறு தான் இருக்கும்.<ref name="tbm"/> இரட்டை விசை வடிவமைப்புகளில், ஒரே நேரத்தில் இரு விசைகளையும் கூட அழுத்தி, இரு குழல்களையும் ஒரேசமயத்தில் சுட இயலும். ஆனால் இச்செயல் பொதுவாக தவிர்க்கப்படும், ஏனெனில் இது பின்னுதைப்பை இரட்டிப்பாக்கி, துப்பாக்கியையும் சுடுநரையும் பாதிக்கும். 
 
பின்னர் வந்த ரகங்கள், இரு குழல்களையும் மாறிமாறி வெடிக்கக் செய்த, ஒரே விசையை கொண்டிருந்தன; இதை ''ஒற்றைத் தெரிவு விசை'' (''single selective trigger'') அல்லது ''ஒ.தெ.வி. ''எனலாம். ஒ.தெ.வி இரு குழல்களையும் ஒரேசமயத்தில் சுட அனுமதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டது. 
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைக்குழல்_சிதறுதுமுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது