வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shanmugambotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Weißbrot-1.jpg|thumb|right|250px|ரொட்டி]]
[[படிமம்:Fladenbrot-2.jpg|thumb|right|250px|[[துருக்கி]] தட்டை ரொட்டி]]
'''வெதுப்பி''' (''bread'') அல்லது '''பாண்''' அல்லது [[உரொட்டி|ரொட்டி]] என்பது [[ஐரோப்பா|ஐரோப்பிய]], மத்திய கிழக்கு, இந்தியக் கலாசாரங்களின் உணவுவகைகளில் ஒன்றாகும். மாவை நீரில் குழைத்துச் சூடாக்கித் தயாரிக்கப்படுகின்றது. [[உப்பு]]ம் ஈஸ்ட்டும் வழக்கமாகப் பயன்படும். சுவையூட்டிகள், [[பழம்|பழங்கள்]], [[காய்கறி]]கள், பருப்புக்களும் சேர்த்தும் வெதுப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. வெதுப்பிகளில் பல வகைகள் உள்ளன. வெதுப்பி மிக அதிக காலமாக உண்ணப்படும் தயாரித்த உணவு வகையாகும். பெரும்பாலும் இவை கோதுமை மற்றும் மைதாவால் தயாரிக்கப்படுகிறது.ஒரு சில கலாச்சாரங்களில், ரொட்டி வழிபாட்டு முறைகளில் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
 
== ரொட்டியின் வகைகள் ==
ரொட்டியில் பல்வேறு வகைகள் உண்டு. அவை:
* பூரி
* புரோட்டா
* சப்பாத்தி
* நான்
* தந்தூரி
* பிஸ்கட்
* ஸ்கோன்
வரி 18 ⟶ 14:
* லாவாஷ்
* ப்ரெட்செல்
=== பூரி ===
===== தேவையான பொருட்கள் =====
* கோதுமை மாவு - 2 கோப்பை
* உப்பு - 1/4 தேக்கரண்டி
* சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
* நெய் [அ] வனஸ்பதி] - 1 தேக்கரண்டி
* பேகிங் பௌடர் - 1/4 தேக்கரண்டி
* மாவைப் பிசைவதற்குத் தேவையான தண்ணீர் [அ] பால்
* எண்ணைய் - பூரி பொரிப்பதற்குத் தேவையான அளவு
===== செய்முறை =====
மாவு, உப்பு, பேக்கிங் பௌடர் இவற்றை சலிக்கவும்.
சர்க்கரை, நெய், மாவு இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பால் [அ] தண்ணீர் விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
2 மணி நேரம் மூடி வைக்கவும்.சிறு உருண்டைகளாக செய்து பூரி இடவும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து ஒவ்வொன்றாகப் பொரிக்கவும்.
==== புரோட்டா ====
===== தேவையான பொருட்கள் =====
* மைதா - 4 கோப்பை
* பேகிங் பௌடர் - 1/4 தேக்கரண்டி
* சர்க்கரை - 1 தேக்கரண்டி
* சமையல் சோடா - 3 சிட்டிகை
* பொடி உப்பு - 1 1/2 தேக்கரண்டி
* எண்ணைய் - 1/2 கோப்பை
===== செய்முறை =====
மைதாவோடு, பதப்பொடி, உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும். மாவோடு,  2 முதல் 3 தேக்கரண்டி எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும். ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும். எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல் மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான புரோட்டாவாக கையினால் தட்டவும்.சுமாரான அளவில் தோசைக்கல் வைத்து புரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
 
==== சப்பாத்தி ====
===== தேவையான பொருட்கள் =====
* கோதுமை மாவு - 2 கோப்பை
* தண்ணீர் - மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு
* உப்பு - விருப்பமானால்
* எண்ணை - 2 தேக்கரண்டி
===== செய்முறை =====
கோதுமை மாவுடன் உப்பு [தேவையானால்], மற்றும் நீர் விட்டு சற்று இளக்கமாக  பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம். சுமார் 3 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
=== நான் ===
===== தேவையான பொருட்கள் =====
*மைதா - 500 கிராம்
* புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கோப்பை
* வெதுவெதுப்பான பால் - 1/2 கோப்பை
* உலர்ந்த ஈஸ்ட் - 3/4 தேக்கரண்டி
* சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
* பொடி உப்பு - 1 1/4 தேக்கரண்டி
* பதப்பொடி - 3/4 தேக்கரண்டி
* சமையல் சோடா - 3/4 தேக்கரண்டி
* உருகிய நெய் [அ] வெண்ணைய் - 4 தேக்கரண்டி
===== செய்முறை =====
மைதாவோடு உப்பு, பதப்பொடி, சோடா இவற்றை சேர்த்து மும்முறை சலிக்கவும். ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்திலிட்டு, நடுவில் ஒரு குழி செய்யவும்.ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை அந்த குழியில் ஊற்றவும்.ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும்.பிசையும் பொழுது தேவைப்பட்டால் வெந்நீர் தெளித்து தளர்த்தியான மாவாகப் பிசையவும்.ஒரு அகலமான் தாம்பூலத்தில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேலே ஒரு தட்டு வைத்து மூடவும். மாவு பொங்கி வர இடைவேளி இருக்குமாறு வைக்கவும். 5 [அ] 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்யவும்.உருட்டுக் கட்டையால் 1/4 அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும். ஒரு நுணியை கையால் இழுத்து பூசினி விதை போன்ற வடிவமாக்கவும்.
அதன் மேல் பக்கம் சிறிது தண்ணீர் தடவி, சூடான பாலின் மேல் தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும்.மிதமான அளவில் வைத்து மேலே மூடியால் மூடவும். மூடியைத் திறந்தால், நான் உப்பி வந்திருக்கும். தோசைக்கல்லில் பிடியைப் பிடித்து, தலைகீழாகத் திருப்பி நேரிடை அனலில் காட்டி மற்றொரு பக்கத்தை பொன்னிறமாக சுடவும்.
=== தந்தூரி ===
 
===== தேவையான பொருட்கள் =====
* முழு கோழி (எட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
* மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
* கார மசாலா தூள் – 1 தேக்கரண்டி
* மிளகுதூள் – 1 தேக்கரண்டி
* சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
* தனியாதூள் – 1 தேக்கரண்டி
* சோம்புத்தூள் – 1 தேக்கரண்டி
* மிளகுதூள் – 1 தேக்கரண்டி
* தயிர் – 1 /2 கோப்பை
* எலுமிச்சம்பழசாறு – 1
* இஞ்சி,பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
* மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
* சிகப்பு கலர் பவுடர் – சிட்டிகை
* உப்பு – தேவையான அளவு
* ஆலிவ் ஆயில் – 2 மேஜைகரண்டி
* அலங்கரிக்க
* வெங்காய வலையங்கள் – சில
* நறுக்கிய எலுமிசை துண்டுகள் – சில
* மல்லித்தழை – சிறிது
 
===== செய்முறை =====
முழு உறித்த கோழியை நன்றாக அலசி பெரிய துண்டுகளாக எட்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளவும். அதில் மேலே கத்தி வைத்து கீறிவிடவும்.கோழி துண்டுகளில் மேலே சொன்ன பொருட்களைப் போட்டு விரவி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவனை முன் சூடு 200 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும் பேக்கிங் ட்ரேயின் மேலே அலுமினியம் தாளால் போட்டு அதன் மேலே ஊற வைத்துள்ள கோழியை தட்டில் வைத்து அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.20 நிமிடங்கள் கழித்து அவனை திறந்து .கோழியை தட்டினை வெளியில் எடுத்து திருப்பி வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கடைசியாக இரண்டு நிமிடங்கள் தந்தூரி மோடில் வைத்து எடுக்கவும். தந்தூரி மோடில் அதிக நேரம் வைத்தால் மேலே கருகி விடும். கோழி துண்டுகளில் மேலே சொன்ன பொருட்களைப் போட்டு விரவி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவனை முன் சூடு 200 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும் பேக்கிங் தட்டின் மேலே அலுமினியம் தாளால் போட்டு அதன் மேலே ஊற வைத்துள்ள கோழியை தட்டில் வைத்து அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.20 நிமிடங்கள் கழித்து அவனை திறந்து . கோழியை தட்டை வெளியில் எடுத்து திருப்பி வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கடைசியாக இரண்டு நிமிடங்கள் தந்தூரி மோடில் வைத்து எடுக்கவும். தந்தூரி மோடில் அதிக நேரம் வைத்தால் மேலே கருகி விடும்.
 
== பிஸ்கட் வகைகள் ==
* சாக்லெட் பிஸ்கட்
* உப்பு பிஸ்கட்
* கூழ்(கிரீம்‌) பிஸ்கட்
* வெணணெய் பிஸ்கட்
* கோதுமை பிஸ்கட்
* மசாலா பிஸ்கட்
=== உப்பு பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
* மைதா மாவு - 200 கிராம்
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* அமோனியா - முக்கால் தேக்கரண்டி
* பொடித்த சர்க்கரை - 50 கிராம்
* தண்ணீர் - 50 மில்லி
* வனஸ்பதி - 75 கிராம்
===== செய்முறை =====
* அமோனியா, உப்பு, சர்க்கரை மூன்றையும் 50 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
* வனஸ்பதியை குழைக்கவும்.
* சலித்த மாவை சேர்த்து அமோனியா உப்பு கலந்த தண்ணீரை சேர்த்து பூரி மாவு போல பிசையவும்.
* அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் அச்சினால் அரை அங்குல பருமனுக்கு வெட்டவும்.
* முள்கரண்டியினால் இலேசாக மேலே குத்தவும்.
* பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் வரிசையாக வைத்து 350 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
 
=== கோதுமை பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
கோதுமை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - 1/4 கோப்பை
நெய் - 2 மேஜைக் கரண்டி
கேசரி கலர் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
எண்ணெய் - தேவையான அளவு
==== செய்முறை ====
கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் குங்குமப்பூ சேர்த்து ஆறவிடவும். சர்க்கரைப் பாகு ஆறியதும், சில துளிகள் வெனிலா எசன்ஸ், கேசரி கலர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
 
=== கூழ்(கிரீம்‌)பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
* சர்க்கரை - 60 கிராம்
* வெண்ணெய் - 60 கிராம்
* மைதா மாவு - 80 கிராம்
* கஸ்டர்ட் பவுடர் அல்லது சோளப்பொடி - 45 கிராம்
* வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
* முட்டை - பாதி
* பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்க:
* வெண்ணெய் - 30 கிராம்
* சர்க்கரை நைசாக பொடித்தது - 60 கிராம்
==== செய்முறை ====
* பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாகக் குழைக்கவும்.
* மைதாமாவு, கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்றாகச் சலித்து, பின் குழைத்த வெண்ணெயுடன் சேர்த்து முடிவில் முட்டையையும் சேர்த்து பூரிமாவு போல பிசையவும்.
* மெல்லிய அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வட்டமாகவோ அல்லது வேறு ஏதாவது அச்சினால் வேறு மாதிரியாகவோ வெட்டவும்.
* பிறகு வெட்டிய துண்டங்களை தட்டில் அடுக்கி 350 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
* இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் வெண்ணெய், சர்க்கரையும் சேர்த்து குழைத்த கலவையில் சிறிது வைத்து இரு பிஸ்கட்டுகளையும் ஒட்டவும்.
 
=== வெணணெய் பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
* வெண்ணெய் - 90 கிராம்
* துருவிய சீஸ் - 60 கிராம்
* மைதாமாவு - 120 கிராம்
* மிளகாய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி
* உப்பு - அரைத் தேக்கரண்டி
==== செய்முறை ====
* வெண்ணெயையும், சீஸையும் நன்றாகக் குழைக்கவும்.
* சலித்த மாவு, உப்பு, மிளகாய் பொடியையும் குழைத்த கலவையுடன் சேர்த்து மூன்றையும் கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
* கால் அங்குல பருமனுக்கு பெரிய அப்பளமாக இடவும்.
* பிறகு பிஸ்கட் வெட்டும் அச்சினால் வெட்டவும்.
* நடுவில் முள் கரண்டியினால் மெதுவாகக் குத்தவும்.
* நெய் தடவி மாவு தூவிய தட்டில் வைத்து 15 இருந்து 20 நிமிடம் வரை 380 டிகிரிபாரன்ஹீட்சூட்டில் பேக் செய்யவும்.
 
=== சாக்லெட் பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
* மைதா மாவு - 100 கிராம்
* வெண்ணெய் - 50 கிராம்
* பொடித்த சர்க்கரை - 50 கிராம்
* கோகோ பவுடர் - அரைத் தேக்கரண்டி
* முட்டை - பாதி
* வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
* பால் - சிறிதளவு
* பிஸ்கட்டுகளின் நடுவே வைக்கும் கிரீம் செய்ய:
* வெண்ணெய் - 20 கிராம்
* ஐசிங் சர்க்கரை - 50 கிராம்
* கோகோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
==== செய்முறை ====
* மைதா, பேக்கிங் பவுடர், கோகோ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இருமுறை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
* பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
* முட்டையை உடைத்து, நன்றாக அடித்து அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும.
* சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்துக் குழைத்துக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
* சலித்த மாவை குழைத்த கலவையுடன் சேர்த்து மிருதுவான ஒரு கலவையாக செய்து கொள்ளவும்.
* கைகளினால் கலக்கவும் (கரண்டிஉபயோகிக்கக் கூடாது).
* ஒரு பட்டர் பேப்பர் பை செய்துகொள்ளவும். அதில் ஸ்டார் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.
* அந்த அச்சின் நுனிப்பாகம் கால் அங்குலம் வெளியே தெரியுமாறு இருத்தல் வேண்டும்.
* அந்தப் பையில் இந்தக் கலவையை போட்டுக் கொள்ளவும்.
* நெய் தடவி, மாவு தூவிய தட்டில் முக்கோணமாகவோ, நீளமாகவோ பிழிய வேண்டும்.
* ஒரே வடிவில் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக பிழிந்து கொள்ள வேண்டும்.
* பிஸ்கட்டுகளை 380 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
* ஐசிங் சர்க்கரை, கோகோ, வெண்ணெய் இவற்றை நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
* கலவை ஆனதும் நன்கு ஆறவிட்டு, இரண்டு இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் கிரீம் தடவி ஒட்டவும்.
 
=== மசாலா பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
* மைதா -- 1 கோப்பை
* வெங்காயம் -- 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி தழை -- ஒரு மேஜை கரண்டி
* பச்சை மிளகாய் -- 3 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் -- 1/2 தேக்கரண்டி
* கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
* உப்பு -- தேவையான அளவு
* பால் -- சிறிதளவு
* எண்ணைய் -- தேவையான அளவு
==== செய்முறை ====
* வெங்காயம் , கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
* அத்துடன் மைதாவை சேர்த்துக்கொள்ளவும்.
* வாணலியில் 2 1/2மேஜை கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து மைதா கலவையில் போடவும்.
* தேவையான பாலை ஊற்றி மைதாவை கெட்டியான மாவு பதத்திற்குப் பிசைந்து மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
* வட்டமான அச்சில் வட்ட வட்டமாக வெட்டியெடுக்கவும்.
* அதை வாணலியில் எண்ணைய் ஊற்றி மிதமான சூட்டில் பொன் நிறத்தில் பொரிக்கவும்.
 
== கேக் வகைகள் ==
* சைவ ஸ்ட்ராபெர்ரி கேக்
* அசைவ ஸ்ட்ராபெர்ரி கேக்
* மஞசள் கேக்
* சிவப்பு வெல்வெட் கேக்
=== சைவ ஸ்ட்ராபெர்ரி கேக் ===
===== தேவையானவை =====
* மைதா மாவு - 300 கிராம்
* பேக்கிங் சோடா - 2 தேக்கரண்டி
* பதப் பொடி - ஒரு தேக்கரண்டி
* கன்டன்ஸ்ட் மில்க் - 300 மில்லி லிட்டர்
* ஸ்ட்ராபெர்ரி ஃபியூரி - 180 கிராம்
* பால்- 50 மில்லி
* சர்க்கரை - 2 மேஜை கரண்டி
* வெள்ளை வினிகர் - ஒரு மேஜை கரண்டி
* வெனிலா பொடி- ஒரு தேக்கரண்டி
* ஸ்ட்ராபெர்ரி பொடி - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
* உருக்கிய வெண்ணெய் - 200 மில்லி
===== செய்முறை =====
ஓவனை 180 டிகிரி பாரன்ஹீட் செய்துகொள்ளவும். கேக் பேனை எடுத்து வெண்ணெயைத் தடவி இதன் மேல் சிறிது மைதா மாவைத் தூவி செட் செய்யவும். ஒரு பெரிய கோப்பையில் மைதா மாவைப் போட்டு இதில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் கிளறவும். இதில் கன்டன்ஸ்டு மில்க், ஸ்ட்ராபெர்ரி ஃபியூரி, வெனிலா எசன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் மற்றும் வெண்ணெயைச் சேர்த்துக் கிளறி, பேனில் வைத்து 35 நிமிடம் பேக் செய்யவும்.
=== அசைவ ஸ்ட்ராபெர்ரி கேக் ===
 
===== தேவையானவை =====
* மைதா - 250 கிராம்
* சோள மாவு - 32 கிராம்
* பேக்கிங் பொடி - 4 தேக்கரண்டி
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* ஸ்ட்ராபெர்ரி ஃபியூரி - 180 கிராம்
* பால் - 60 மில்லி
* சர்க்கரை - 350 கிராம்
* உப்பில்லாத வெண்ணெய் - 340 கிராம்
* வெனிலா பொடி - ஒரு தேக்கரண்டி
* ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
* முட்டை - 4
* கேசரிபொடி - 2 (அல்லது) 3 துளிகள் (விருப்பப்பட்டால்)
===== செய்முறை =====
அவனை 180 டிகிரி பாரன்ஹீட் செய்து, கேக் பேனில் சிறிது வெண்ணெயைத் தடவி சிறிது மைதா மாவைத் தூவி விடவும். ஒரு சிறிய கோப்பையில் ஃபியூரி, பால், வெனிலா எசன்ஸ் சோள மாவு, பேக்கிங் பவுடர், முட்டை ஃபுட்கலர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பிறகு, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். பின், வெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவும். இந்தக் கலவைைய பேனில் ஊற்றி, 25 நிமிடம் பேக் செய்யவும்.
=== மஞசள் கேக் ===
 
===== தேவையானவை =====
* மைதா- 350 கிராம்
* வெண்ணெய் - 110 கிராம்
* எண்ணெய் - 120 மில்லி
* சர்க்கரை - 300 கிராம்
* முட்டை - 4
* பேக்கிங் பொடி - நான்கரை தேக்கரண்டி
* உப்பு - முக்கால் தேக்கரண்டி
* வெனிலா பொடி - 2 தேக்கரண்டி
* சூடான பால் - 250 மில்லி
===== செய்முறை =====
அவனை 180 டிகிரி பாரன்ஹீட் செய்யவும். பிறகு, கேக் பேனை எடுத்து, இதில் வெண்ணெய் தடவி சிறிதளவு மைதா மாவைத் தூவி விடவும். ஒரு பெரிய கோப்பையில் மைதா மாவை வைத்து, இத்துடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்க்கவும். வேறு ஒரு கோப்பையில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். இதில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றிச் சேர்த்து அடிக்கவும். பிறகு, இதில் பெரிய கோப்பையில் வைத்திருக்கும் மாவைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றவும். பிறகு, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, இந்தக் கலவையை பேனில் வைக்கவும். காற்றுக்குமிழ்கள் இல்லாததை உறுதி செய்த பின்பு, 30 நிமிடம் வரை பேக் செய்யவும். பிறகு எடுத்துப் பரிமாறவும்.
=== சிவப்பு வெல்வெட் கேக் ===
 
===== தேவையானவை =====
* மைதா - 300 கிராம்
* பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
* கோக்கோ பொடி - ஒரு தேக்கரண்டி
* சர்க்கரை - 300 கிராம்
* முட்டை - 2
* எண்ணெய் - 350 மில்லி
* வினிகர் - ஒரு தேக்கரண்டி
* கேசரிபொடி - 2 மேஜை கரண்டி
* வெனிலா பொடி - ஒரு தேக்கரண்டி
* மோர் - 250 மில்லி
* வெண்ணெய் - சிறிதளவு
===== செய்முறை =====
அவனை 180 டிகிரி பாரன்ஹீட் செய்து கொள்ளவும். கேக் பேனில் சிறிதளவு வெண்ணெயைத் தடவி, மைதா மாவைத் தூவி விடவும். பிறகு ஒரு திட்டமான கோப்பையில் மைதா மாவு, பேக்கிங் சோடா மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்துத் தனியாக செட் செய்து வைக்கவும். பெரிய கோப்பையில் சர்க்கரையை நன்றாகப் பொடி செய்து போட்டு, இதனுடன் முட்டையைச் சேர்த்துக் கிளறவும். இதில் எண்ணெய், வினிகர், ரெட் ஃபுட் கலர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது நேரம் கழித்து, இதில் தனியாக கலந்து வைத்திருக்கும் மாவையும் மோரையும் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாகச் சேரும் வரை நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கிளறி வைத்திருக்கும் இந்தக் கலவையை எடுத்து பேனில் அழகாக வைக்கவும். இதில் இருக்கும் காற்றுக்குமிழ்கள் போன பிறகு, அதை 30 நிமிடம் பேக் செய்யவும்.
 
 
 
 
[[பகுப்பு:உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது