பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
{{Islam}}
'''பதுருப் போர்''' (''Battle of Badr'', ''பத்ர் போர்'', {{lang-ar|غزوة بدر}}, [[மார்ச் 17]], [[கிபி]] [[624]]) [[இசுலாமிய வரலாறு|இசுலாமிய வரலாற்றில்]] முசுலிம்கள் [[இசுலாம்|இசுலாத்தின்]] பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் [[அரேபியா]]வின் (இன்றைய [[சவூதி அரேபியா]]) ஹிஜாஸ் (Hijaz) பகுதியில் [[ஹிஜ்ரி|இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி)]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் [[வெள்ளிக்கிழமை]] நடைபெற்றது. [[மக்கா]]வில் இசுலாத்தை எதிர்த்த [[குறைசி]]யர்களுடன் இடம்பெற்ற இப்போர் [[முகம்மது நபி]]க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.<ref>Quraish refers to the tribe in control of Mecca. The plural and adjective are Quraishi. The terms "Quraishi" and "Meccan" are used interchangeably between the [[Hijra (Islam)|Hijra]] in 622 and the Muslim [[Conquest of Mecca]] in 630.</ref> முசுலிம்கள் பதுருச் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் வலிமையோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. [[குர்ஆன்|குர்ஆனிற்]] குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில போர்களில் பதுருப் போரும் ஒன்றாகும்.
 
3:123 (இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும். 3:124 “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும்.
 
இப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் சில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெருஞ் சமர் ஆகும். முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரபு நாட்டின் வலிமை மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதுமாகத் திகழ்ந்த நகரமாக மக்கா விளங்கியது. முசுலிம்களின் படை வலிமையை விட மூன்று மடங்கு படையினரை மக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிம்கள் பத்ருப் போரிற் பெற்ற வெற்றி அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது [[மதீனா]]விற் பிரிந்திருந்த பிரிவினரிடையே முகம்மது நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது