கா.முகம்மது காசிம், பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரை சேர்ந்தவர். இவரது தாத்தா ர.சத்தார் கான் வ.களத்தூரின் பழைய மோதினார். தந்தை ச.காதர் கான் தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தாத்தா ர.சத்தார் கான் ரமலான் நோன்புகளை தவறாமல் கடைப்பிடிப்பார். பாட்டி ச.ஹபீபுன்னிஸா தொழுகைகளை தவறாமல் தொழுவார். அன்னை கா.பாத்திமா பீவி பணிவிடைகளை பரிவாக செய்து வந்தார்.

நாநா மு.அப்துல் லத்தீப் தமிழ்நாடு காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். இருமுறை ஹஜ்ஜுக்கு சென்று வந்தார். நாநி அ.கதீஜா பீவி கண்ணுங்கருத்துமாக குடும்பத்தை கவனித்தார்.

நபிகள் நாயகத்தின் தலைமைப் பண்புகளை விளக்கும் உலகின் உறவினர் என்னும் நூலை எழுதியுள்ளார்.